Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போது அளிக்கப்படும் சிகிச்சை என்ன! உடல்நிலை எப்படி இருக்கிறது? பரபர தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2023
in அரசியல் செய்திகள்
0
செந்தில் பாலாஜிக்கு இப்போது அளிக்கப்படும் சிகிச்சை என்ன! உடல்நிலை எப்படி இருக்கிறது? பரபர தகவல்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Vigneshkumar
Published: Thursday, June 15, 2023, 10:01 [IST]
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அங்கே வழங்கப்படும் சிகிச்சை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் கடந்த சில நாட்களாகவே பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டிற்கு சென்றனர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி அதன் பிறகு அடுத்தடுத்து பகீர் நிகழ்வுகள் நடந்தன. அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி: அமலாக்கத்துறை விசாரணையின் போது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவர் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 2ஆவது நாளாக இன்றும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய நாளங்களில் அடைப்பு இருப்பதால் அவருக்கு ஆஜ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடைப்பு காரணமாக அமைச்சருக்கு பைபாஸ் ஆப்ரேஷன் செய்ய ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. அவர் சுயநினைவுடனேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. மருத்துவர்கள் ஆலோசனைப்படியே உணவு மற்றும் மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. என்ன சிகிச்சை: ஐசியு பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இசிஜி, பல்ஸ் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால் ஸ்டண்ட் பொருத்துவதற்குப் பதிலாக அறுவைச் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஒரு பக்கம் 90% மற்றொரு பக்கம் 80% அடைப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு இதே கருத்துகளைக் கூறியிருந்தனர். இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் கட்டுகளைத் தவிர்க்கும் ஹெபாரின் ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடைப்பு காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவமனை பரிந்துரை அளித்திருந்தது. இருப்பினும், அவர் காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் அங்கே ஆப்ரேஷன் செய்ய அனுமதி அளிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். ஆப்ரேஷன்: இருப்பினும் நேற்றைய தினம் ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்பது போல அமலாக்கத் துறை கூறியிருந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இன்று முடிவு செய்ய உள்ளது. ஒரு வேலை தனியார் மருத்துவமனைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஓமந்தூரார் மருத்துவமனையிலேயே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படும். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பொதுமக்கள் பலருக்கும் வெற்றிகரமாக இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கே தனியாக மருத்துவ வல்லுநர் குழுவும் உள்ளனர். ரோபோடிக் மூலம் அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு அங்கே வல்லுநர் குழு உள்ளனர். இதனால் ஒரு வேலை நீதிமன்றம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி தரவில்லை என்றால் அங்கேயே அறுவை சிகிச்சை செய்யப்படும். 8 கணைகள்.. செந்தில் பாலாஜிக்கு எதிராக.. அடித்து அடித்து சொன்ன அமலாக்கத்துறை.. இதுதான் சிக்கலே!
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Minister Senthil Balaji is getting treatment in Chennai omandurar hospital: Minister Senthil Balaji health latest updates in tamil.
Story first published: Thursday, June 15, 2023, 10:01 [IST]

.

Previous Post

“2024 தேர்தலில் தமிழரை பிரதமராக அறிவியுங்கள், நாங்கள் ஆதரிக்கிறோம்” – சீமான் பேச்சு

Next Post

தரையில் புரண்டு கதறி அழுதார்… – செந்தில்பாலாஜி கைதின்போது நடந்தவை குறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தரையில் புரண்டு கதறி அழுதார்... - செந்தில்பாலாஜி கைதின்போது நடந்தவை குறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்

தரையில் புரண்டு கதறி அழுதார்... - செந்தில்பாலாஜி கைதின்போது நடந்தவை குறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In