Last Updated:
ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த செம்மர கடத்தல்காரர் கொடுத்த ரகசிய தகவலில் சர்வதேச நாடுகளுக்குக் கட்டை கடத்தி வந்த மாஃபியா கும்பலைச் சேர்ந்த முக்கிய தலைகள், ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காஜூபேட்டை பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட கும்பலை அம்மாநில செம்மர கடத்த தடுப்பு பிரிவு போலீசார், பொறி வைத்து பிடித்தனர். பிடிபட்டவர்கள் சாதாரண கட்டை கடத்தல்காரர்கள் இல்லையென்பதை உணர்ந்த போலீஸார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து புளிந்தெடுத்தனர். அப்போது, பிடிபட்டவர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், செம்மர கடத்தல் தொடர்பாக ஆந்திரா போலீசார் மிக முக்கிய துப்பு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில்தான், செம்மரக்கட்டைகளின் சர்வதேச வியாபாரத்தின் ஒரு பகுதி, வெளியே தெரியவந்துள்ளது. ஆந்திராவிலிருந்து செம்மரக்கட்டைகளைக் கடத்தி டெல்லியில் பதுக்கி அங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏலம் விடப்பட்டு வியாபாரம் செய்து வந்துள்ளனர். அதுவும் டெல்லியில் ரகசிய கிடங்கு அமைத்து அதில் ஏ கிரேடு, பி கிரேடு என ரகம் ரகமான செம்மரக்கட்டைகளைப் பதுக்கி வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர்.
சேம்பிள் கட்டைகளை வெளிநாடுகளுக்கு எடுத்து சென்று, அங்கு வைத்து டீல் பேசுபவர்கள் பணம் கைமாறியதும் முழு கட்டைகளையும் கண்டைனரில் கப்பல் மூலம் கடத்தியுள்ளனர். இதற்காக பார்டர் போலீஸ், ஹார்பர் ஆபிசர்ஸ், கப்பல் கேப்டன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்குப் பெரிய அளவில் பணத்தைக் கைமாற்றி கைக்குள் போட்டு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்திடுக்கிடும் தகவல், ஒரு தமிழ்நாட்டுக் கட்டைக்கடத்தல்காரர் மூலம் ஆந்திர போலீசாருக்கு தெரியவர, உடனே சிறப்பு போலீஸ் படை டெல்லிக்கு விரைந்தனர். அங்கு வனத்துறையினர் உதவியுடன் ரைடில் ஈடுபட செம்மரக்கட்டைகளை சர்வதேச அளவில் கடத்தி வந்த முக்கிய புள்ளியான முகமது இர்பான் என்பவரைக் கட்டம் கட்டி தூக்கினர். டெல்லியில் உள்ள தும்லக்கா பாத் பகுதியில், கதவு எண் 366- ல் ரகசிய கிடங்கு அமைத்து, அங்கு செம்மரக்கட்டைகளை பதுக்கி சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.
அதற்கு லீடராக செயல்பட்ட அமித் சம்பர்பவார் என்பவரையும் போலீசார் தூக்கினர். அவரின் கண்ட்ரோலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் எடையுள்ள 356 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுவரை நடத்தப்பட்ட ரைடில், முக்கிய கடத்தல் மன்னன்கள் குறித்தும் அவர்கள் யார் யாருக்கு கட்டைகள் சப்ளை செய்துள்ளார்கள்? என்பது குறித்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணையில் மேலும் பல கட்டை கடத்தல் மாஃபியா குறித்தும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து டெல்லிக்குக் கட்டை கைமாற்றுவது யார்? அதை வெளிநாடுகளில் டீல் பேசி பல கோடி ரூபாய்க்கு கைமாற்றுவது யார்? அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படும் அரசு அதிகாரிகள் என ஒட்டுமொத்த கும்பலுக்கும் ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு பிரிவு போலீசார் செக் வைத்துள்ளனர்.
Delhi,Delhi,Delhi
October 12, 2025 1:31 PM IST
‘புஷ்பா’ பட பாணியில் ஷாக்.. தமிழ்நாடு செம்மர கடத்தல்காரர் சொன்ன சீக்ரெட்.. கூண்டோடு சிக்கிய சிண்டிகேட் டீலர்கள்!

