Last Updated:
Tirupati Rain | திருப்பதி மலையில் கனமழை காரணமாக பக்தர்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது.
திருப்பதி மலையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை முதல் இரவு வரை என 24 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியவாறே இருக்கும். ஏழுமலையானை தரிசிக்க முந்தைய நாட்களிலேயே அறை எடுத்து தங்குபவர்கள் ஏராளம். அப்படி இருக்கையில், நேற்று இரவு 12 மணி அளவில் துவங்கி திருப்பதி மலையில் விடிய விடிய கன மழை வெளுத்து வாங்கியது.
கனமழை காரணமாக பக்தர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது உள்ளிட்ட இயல்பு நடமாட்டத்தில் தடைகள் ஏற்பட்டன. மேலும், தாழ்வான பகுதிகளில் மலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் கனமழை, திருப்பதி மலையில் திடீரென்று ஏற்பட்ட சீதோஷ்ன மாற்றம் பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னும் இரண்டு நாட்கள் கனமழையின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருப்பதி மலை பாதையில் பாறை சரிவுகள் ஏற்படாமல் தடுக்கவும், அப்படியே ஏதாவது ஏற்பட்டால் பக்தர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவஸ்தான நிர்வாகம் எடுத்து வருகிறது.
September 16, 2025 11:51 AM IST

