Last Updated:
கர்நாடக விஜயபுரா சடாச்சன் எஸ்பிஐ வங்கியில் ராணுவ உடையில் மர்ம கும்பல் 8 கோடி பணம் 50 கிலோ தங்கம் கொள்ளை.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் அதிகாரிகளை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தின் சடாச்சன் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குள் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் ராணுவ வீரர்கள் உடையில் 5 பேர் முகமூடி அணிந்து புகுந்தனர். மேலாளர், காசாளர் உள்ளிட்ட 3 பேரை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வங்கி ஊழியர்களை மீட்டனர்.
விசாரணையில் 8 கோடி ரூபாய் பணம், 50 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளதால், அந்த மாநிலத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
அவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள சோலாபூர் மாவட்டத்திற்கு தப்பிச்சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
VIDEO | Vijayapura, Karnataka: A gang of masked men struck at State Bank of India branch looting cash and gold worth crores on Tuesday evening. Police have launched manhunt to nab the criminals.#Bankloot #KarnatakaNews
(Full video available on PTI Videos -… pic.twitter.com/51eq1Jen6Y— Press Trust of India (@PTI_News) September 17, 2025
முன்னதாக இதே ஆண்டு ஜூன் மாதம், இதே விஜயபுரா கனரா வங்கியில் மர்ம நபர்கள் 59 கிலோ தங்கத்தையும், 5.2 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். தற்போது அதே மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
September 17, 2025 3:01 PM IST
50 கிலோ தங்கம்.. ரூ. 8 கோடியை கொள்ளையடித்த கும்பல்! SBI வங்கிக்கு ராணுவ உடையில் வந்தவர்கள் யார்? போலீஸ் தீவிர விசாரணை

