Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மர்ம உறுப்பில் 23 ஸ்டேப்ளர் பின்கள்.. இளம்பெண்ணை நம்பி சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2025
in அரசியல் செய்திகள்
0
மர்ம உறுப்பில் 23 ஸ்டேப்ளர் பின்கள்.. இளம்பெண்ணை நம்பி சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வரும் இந்தக் காட்சிகளை அப்படியே பிரதி எடுத்தது போன்று, ஒரு ஜோடி நிஜ வாழ்க்கையில் அரங்கேற்றி பணம் பறித்துள்ள சம்பவம் தான் கேரளாவை அதிரச் செய்துள்ளது. ஆண்களுக்கு இன்ஸ்டாகிராமில் வலைவிரித்து, தனியாக வரவழைத்து, கயிற்றில் கட்டிப்போட்டு கொடூரமாக சித்ரவதை செய்யும் பேய் குணம் கொண்டவர்கள் இந்த தம்பதி என பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் பீதியுடன் தெரிவித்துள்ளனர். ஹனிட்ராப் வலையில் விழ வைத்து, ஆண்களை கொடுமைப்படுத்தி ரசிக்கும் இந்த சைக்கோத் தம்பதியின் பகீர் பின்னணி என்ன?

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான ஜெயேஷ். இவரது மனைவி 23 வயதான ரஷ்மி. ரஷ்மி பார்ப்பதற்கு குழந்தை முகத்துடன் அப்பாவியாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அரக்க குணம் கொண்ட கொடூர மனம் படைத்தவர் என போலீசார் கூறுகின்றனர். எப்போதும் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்து கொண்டிருக்கும் ரஷ்மி சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவைச் சேர்ந்த 19 வயது இளைஞருக்கு தூது விட்டிருக்கிறார்.

ஒரு பெண் தனக்கு வலை விரிப்பதை புரிந்து கொள்ளாத அந்த இளைஞரும், ரஷ்மியுடன் இன்ஸ்டகிராமில் விடிய விடிய ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடியிருக்கிறார். சில நாட்கள் பழக்கத்திலேயே அவர்களின் பழக்கம் எல்லை மீறி சென்றிருக்கிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதி, அடுத்த வலையை விரித்திரிக்கிறார் ரஷ்மி. “ஜாலியாக இருக்கலாம் வாங்க என் வீட்டுக்கு” என ரஷ்மி அழைக்க, பாய் தலகாணியை மூட்டை கட்டிக் கொண்டு இதோ வந்து விட்டேன் என ஜபர்தஸ்தாக பத்தினம் திட்டாவிற்கு ஓடியிருக்கிறார் அந்த இளைஞர்.

பத்தனம்திட்டாவில் உள்ள கொய்ப்ரம், பகுதியில் உள்ள ரஷ்மியின் வீட்டிற்கு புயல் வேகத்தில் வந்த அந்த இளைஞர், வீட்டிற்குள் சென்று ரஷ்மியை நெருங்கியபோது, பின்னால் இருந்த ஒரு இளைஞர் அந்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அந்த நபர் வேறு யாரும் அல்ல ரஷ்மியின் கணவர் ஜெயேஷ்தான் அந்த வீடியோவை எடுத்துக் கொண்டிருந்தார். செல்போனும் கையுமாக ஜெயேஷைக் கண்டதும் அந்த இளைஞருக்கு தூக்கிவாரிப் போட்டுள்ளது.

இளைஞர் சுதாரிப்பதற்குள் உருட்டுக் கட்டையில் சரமாரியாக வெளுக்க ஆரம்பித்தார் ஜெயேஷ். பின் இளைஞரிடமிருந்த விலை உயர்ந்த ஐபோனையும், 6 ஆயிரம் பணத்தையும் பறித்துக் கொண்டனர். அதன்பின் தான் தங்கள் சித்ரவதையைத் தொடங்கியுள்ளனர் அந்த சைக்கோ தம்பதி. அந்த இளைஞரை கயிற்றால் கட்டி தொங்கவிட்டு சரமாரியாக அடித்து வெளுக்க ஆரம்பித்தனர். அவரது விரல் நகங்களை குறடு கொண்டு பிடுங்கியுள்ளனர்.

மேலும் உடல் முழுவதும் உள்ள ரத்த காயங்களில் மிளகு ஸ்பிரேயை அடித்து அவரை கதற விட்டுள்ளனர். உச்சகட்டமாக அவரது மர்ம உறுப்பில் 26 ஸ்டேபிளர் பின்களை அடித்து அந்த இளைஞரை அலற விட்டிருக்கின்றனர். வலியால் அலறிய இளைஞரின் வாயில் துணியை அடைத்து மணிக்கணக்கில் சித்ரவதை செய்து ரசித்துள்ளனர். இந்த கொடூர சித்ரவதையை ரஷ்மி தான் முன் நின்று அரங்கேற்றியதாகவும், அவர்கள் இருவரும் பேய் குணம் கொண்ட கொடூரரர்கள் என்றும் பாதிக்கப்பட்ட இளைஞர் பீதியுடன் தெரிவித்துள்ளார்.

இரவு 8 மணியளவில் புத்துமோனில் உள்ள ஆட்டோ ஸ்டாண் அருகே ஆள்நடமாட்டமற்ற இடத்திற்கு அந்த இளைஞரை கொண்டு சென்று சாலையோரமாக வீசிவிட்டு சென்று விட்டனர். அந்த வழியாகச் சென்ற ஒருவர், இளைஞரின் முனகல் சத்தத்தைக் கேட்டு, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். தகவலறிந்த வந்த ஆரன்முளா போலீசார் விசாரித்தில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தது. மருத்துவ பரிசோதனையில் ஸ்டேப்ளர் காயங்கள் மற்றும் பிற காயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் செல்போன் தகவல்களை சேகரித்த போலீசார் செப்டம்பர் 13ம் தேதி தம்பதி இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், பலரை இதுபோன்று கொடூரமாக டார்ச்சர் செய்திருப்பது தெரியவந்துள்ளது. செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஓணம் திருவிழா அன்று, ஜெயேஷின் முன்னாள் சக ஊழியரை, இதே முறையில் குறிவைத்து கொடூரமாக சித்ரவதை செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் அவரது மர்ம உறுப்பில் 23 ஸ்டேப்ளர் பின்களை அடித்து, நகங்களை பிடுங்கி, மிளகு ஸ்ப்ரே தெளித்து அதே டெம்ப்ளேட்டில் சித்திரவதை செய்திருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: தந்தையுடன் திருமணத்தை மீறிய உறவு.. பெண்ணை கொடூர கொலை செய்த மகன்.. விசாரணையில் அதிர்ச்சி!

தம்பதியின் பின்னணி குறித்து விசாரித்த போது சிலதகவல்கள் தெரியவந்தது. ரஷ்மி 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே ஜெயேஷுடன் காதல்வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கிறார். அப்போது ஜெயேஷ் மீது POCSO வழக்கு பதிவானது, பின்னர் திருமணத்தால் அந்த வழக்கு தீர்க்கப்பட்டது. இவர்களின் மனநிலை பழிவாங்கும் உணர்வால் தூண்டப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்ன்றனர். ஜெயேஷின் செல்போனில் இருந்த வீடியோக்கள், இவர்கள் செய்த கொடூரத்தை போலீசாருக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்பி ராஜேந்திரன் பாபு சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது கேரளாவையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 16, 2025 7:15 PM IST



.

Previous Post

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!

Next Post

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்!

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In