Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொல்கத்தாவை புரட்டிப் போட்ட பெரும் மழை! ஒரே இரவில் நடந்த பயங்கர சம்பவங்கள் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in அரசியல் செய்திகள்
0
கொல்கத்தாவை புரட்டிப் போட்ட பெரும் மழை! ஒரே இரவில் நடந்த பயங்கர சம்பவங்கள் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 23, 2025 5:12 PM IST

மேற்கு வங்கம், கொல்கத்தாவில் பெய்த கனமழையின் காரணமாக ஒரே இரவில் 7 பேர் பலியாகியுள்ளனர். நகரம் முழுக்க வெள்ளம் சூழ்ந்து அனைத்துவிதமான போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

News18News18
News18

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையின் காரணமாக இதுவரை மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர். இந்த கனமழையின் காரணமாக பேருந்து, ரயில், மெட்ரோ, விமானம் என அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவின் பெனியாபுகூர், காளிகாபூர், நேதாஜி நகர், கரியாஹத் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்துள்ளது. இதனை மேகவெடிப்பு என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. காரணம், சில மணி நேரத்தில் காம்தஹாரியில் 332 மி.மீ மழையும், ஜோத்பூர் பூங்காவில் 285 மி.மீ, காளிகாட்டில் 280 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவு கனமழை பெய்ததன் காரணமாக கொல்கத்தா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளால் தங்கள் வாகனத்தை இயக்க முடியாத சூழலும் நிலவி வருகிறது.

மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையத்தின் ஓடு பாதைகளிலும் நீர் சூழ்ந்துள்ளதால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 62 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 42 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவே மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளினுள்ளும் மழை நீர் புகுந்துள்ளதால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மழை வெள்ளம் குறித்து பேசியுள்ள கொல்கத்தா மேயரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், “இதுவரை இவ்வளவு வெள்ளத்தை கண்டதில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு மற்றும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை தொடர்வில்லை என்றால் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும்” எனத் தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜை விழா துவங்க உள்ள சூழலில், இந்த விழாவை வெகு சிறப்பாக கொண்டாடும் மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மிக கனமழையும், அதனால் ஏற்பட்ட பெரும் வெள்ளமும் மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பல்வேறு இடங்களிலும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்களும், கடைகளும் இந்த மழை வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 23, 2025 4:34 PM IST



.

Previous Post

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Next Post

GST 2.0: வரி குறைப்பால் மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படுமா? – மத்திய அரசின் திட்டம் என்ன? | GST 2.0: Will the central and state governments suffer losses due to tax cuts? – What is the central government’s plan?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
GST 2.0: வரி குறைப்பால் மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படுமா? – மத்திய அரசின் திட்டம் என்ன? | GST 2.0: Will the central and state governments suffer losses due to tax cuts? – What is the central government’s plan?

GST 2.0: வரி குறைப்பால் மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படுமா? - மத்திய அரசின் திட்டம் என்ன? | GST 2.0: Will the central and state governments suffer losses due to tax cuts? - What is the central government's plan?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In