Last Updated:
சமீபத்தில் பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பக்தியை வெளிப்படுத்தும் விதமாக கோயிலுக்கு பெரிய அளவிலான நன்கொடைகளை வாரி வாரி வழங்குவது புதிதான ஒரு விஷயம் அல்ல. ஒவ்வொரு நாளுமே திருப்பதி தேவஸ்தானத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் பக்தர்களிடம் இருந்து வருகிறது. இந்த நன்கொடைகள் அனைத்தும் ஏழைகளுக்கு உணவு முதல் சுகாதாரப் பராமரிப்பு வரை பல்வேறு நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
அப்படி சமீபத்தில் பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கி உள்ளார். பெயர் வெளியிட விரும்பாத இந்த பக்தர் திருமலாவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் அலுவலக சேர்மன் பி.ஆர்.நாயுடு அவர்களிடம் ஒரு கோடியே ஐம்பதாயிரம் ரூபாய்க்கான டிமாண்ட் டிராஃப்டை வழங்கி இருக்கிறார்.
இந்த பங்களிப்பை அவர் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கியா வரப்பிரசாதினி திட்டத்தின்கீழ் கொடுத்திருக்கிறார். இந்த திட்டமானது ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் (Sri Venkateshwara Institute of Medical Sciences) நிறுவனம் மூலமாக பொருளாதார வசதி இல்லாத மற்றும் ஊனமுற்ற நோயாளிகளுக்காக மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
இது மாதிரியான பெரிய அளவிலான பங்களிப்புகள் திருப்பதி தேவஸ்தானம் நடத்திவரும் தொண்டு செயல்பாடுகளை தொடர்ந்து நடத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்பதை திருப்பதி கோயில் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. உலகிலேயே மிகவும் பணக்கார இந்து கோயிலாக கொண்டாடப்படும் இந்த கோயில் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள இந்த கோயிலுக்கு கிடைக்கும் பெரிய அளவிலான நன்கொடைகள் சமூக நல திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு திட்டங்கள், அன்னதானங்கள் மற்றும் கல்விக்கான ஆதரவு போன்றவை இதில் அடங்கும்.
கே.எம்.ஸ்ரீனிவாச மூர்த்தி என்ற மற்றொரு பக்தர் 25 லட்சம் மதிப்பிலான வைரம் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி பதக்கம் ஒன்றை கோயிலுக்கு பரிசாக கொடுத்திருந்தார். இது மாதிரியான பரிசுகள் வெங்கடேஸ்வரா கடவுள் மீது பக்தர்கள் வைத்திருக்கும் பக்தியின் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. நெடுந்தூர பயணத்தை மேற்கொண்டு திருப்பதி கோயிலுக்கு வரும் எண்ணிலடங்காத யாத்ரீகர்களுக்கு இலவச உணவு, மருத்துவப் பராமரிப்பு மற்றும் கல்வி போன்றவை இந்த நிதிகள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது.
Bangalore,Karnataka
September 12, 2025 3:47 PM IST

