Last Updated:
டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரக செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு தடை சர்ச்சை எழுப்ப, வெளியுறவு அமைச்சகம் நிகழ்ச்சியில் தொடர்பில்லை என விளக்கம் அளித்தது.
டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், அந்த செய்தியாளர் சந்திப்பை தாங்கள் நடத்தவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியில் உள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார். அவர் வெள்ளிக்கிழமையன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசித்தார்.
அதன்பின்னர், டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமீர்கான் முத்தாகி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பெண் நிருபர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வலிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அமைச்சரின் வருகையையொட்டி, டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
October 11, 2025 5:48 PM IST
பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. டெல்லியில் ஆப்கன் அமைச்சரால் சர்ச்சை.. மத்திய அரசு கொடுத்த விளக்கம்

