இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் கொரிய குடியரசுத் தலைவருடனான இருதரப்பு சந்திப்பின் போது, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து மீண்டும் டிரம்ப் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
”உலகின் பல போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்கும்.
நான் போர்களை எல்லாம் நிறுத்திவிட்டேன். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு பெரிய போராக இருந்திருக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். ஏற்கெனவே 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.
அத்தகைய பரபரப்பான சூழலில், நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? இப்படி நீங்கள் சண்டையிட்டுக்கொண்டால், உங்களுடன் எவ்வித வர்த்தகமும் மேற்கொள்ளமாட்டோம். உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் முடித்துக் கொள்ளவும் என்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
