Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி தார் மாவட்ட பொதுக்கூட்டத்தில், இந்திய பொருட்கள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திய ராணுவம் தனது துணிச்சலான நடவடிக்கை மூலம், கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிட வைத்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி, மகளிர் ஆரோக்கியத்திற்கான பிரசார இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், நாடு முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எவ்வித தயக்கமும் இன்றி இந்த முகாம்களைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாது என்றார்.
தன்னிறைவு அடைவதன் மூலமே, 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என்று கூறினார். இதனை மனதில் வைத்து, நாட்டு மக்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
September 17, 2025 8:53 PM IST

