தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்களை கொண்டிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வெப்ப அலை நாட்கள்
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாட் டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான அதிகபட்ச வெப்ப நிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். இதேபோல பெரும்பாலான பிராந்தியங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும்.
அதேநேரம், மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் வழக்கமான வெப்பநிலை இருக்கும். மேலும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு சமவெளிப்பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 4 நாட்கள் வரை கூடுதலான வெப்ப அலை நாட்கள் இருக்கும்.
இயல்பை விட அதிக வெப்ப அலை
ஏப்ரல்-ஜூன் காலகட் டத்தில் இந்தியாவில வழக்க மாக 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த முறை அதிக நாட்களை எதிர்பார்க்கலாம்.ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப், மத்தியபிர தேசம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களும், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் வட பகுதிகளும் இயல்பை விட அதிக வெப்ப அலை நாட்களை கொண்டிருக்கும்.
இந்த நேரத்தில் கிழக்கு உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் 10 முதல் 11 வரை வெப்ப அலை நாட்கள் இருக்கும். எனினும் தெற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களுக்கு உட் பட்ட சில பகுதிகளில் சாதாரண வெப்பநிலை இருக்கலாம் என்றார்.
April 02, 2025 6:53 AM IST
