Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை… ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய ரயில்வே…! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை… ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய ரயில்வே…! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரயில் செயல்பாடுகள், லோகோமோட்டிவ் கேபின்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் தெரியாத ரயில்வே ஊழியர்களின் அன்றாட வேலைகள், பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பிரபலமடைந்து வருவதால், இந்த ட்ரெண்டை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊழியர்கள் சிலர் பணியில் இருக்கும்போது ரயில் செயல்பாடுகள், பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரகசியமாக இருக்கக்கூடிய வளாகங்களின் வீடியோக்களை படம்பிடித்து பகிர்ந்து கொண்டதாகவும், இதனால் ரயில்வேயின் தொழில்முறை பிம்பம் சேதப்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பு நெறிமுறைகளை மீறும் செயல்களாக அவை இருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.

தென்கிழக்கு ரயில்வே மண்டல நிர்வாகம் ரயில்வே ஊழியர்கள் பணியில் இருக்கும்போது அல்லது அதிகாரப்பூர்வ ரயில்வே வளாகத்திற்குள் இருக்கும்போது வீடியோ பதிவு செய்தல், வீடியோ உருவாக்கம் மற்றும் நேரடி ஒளிபரப்பு ஆகிய செயல்களில் ஈடுபட தடைவிதித்துள்ளது.

கொல்கத்தாவின் கார்டன் ரீச்சின் முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் இது சார்பாக ஒரு உத்தரவைப் பிறப்பித்து, பணி நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபடுவது சேவை நடத்தையை கடுமையாக மீறுவது மட்டுமல்லாமல், பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Longest Metro Line | இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ லைன் எது தெரியுமா…? பலருக்கு தெரியாத தகவல்…

இந்த உத்தரவின்படி, வழிகாட்டுதல்களை மீறும் ரயில்வே ஊழியர்கள் (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். ரயில்வேயின் பல பிரிவுகளில் இந்த சோஷியல் மீடியா ட்ரெண்ட் தொடர்ந்து பரவி வருவதால், மற்ற மண்டலங்களும் இதேபோன்ற உத்தரவுகளை விரைவில் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஸ்டேஷன்கள், ஒர்க்‌ஷாப்ஸ், லோகோமோட்டிவ் கேபின்ஸ், கன்ட்ரோல் ரூம் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட செயல்பாட்டுப் பகுதிகளில் வீடியோ ரெக்கார்ட் செய்வது ரயில்வே நடத்தை விதிகளை மீறுவதோடு, செயல்பாட்டுப் பாதுகாப்பு, ரகசியத் தன்மை மற்றும் ஒழுக்கத்திற்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயல்களாக இருப்பதாக தென்கிழக்கு ரயில்வே மண்டல நிர்வாக சுற்றறிக்கை கூறுகிறது.

மேலும், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சுற்றறிக்கையை ஊழியர்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யவும், வழிகாட்டுதல்கள் குறித்து ஊழியர்களுக்கு கற்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 09, 2025 5:43 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை… ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய ரயில்வே…!



.

Previous Post

TVK – NR Congress: புதிய கூட்டணி? | Vijay பேச்சு எடுபடுகிறதா? | Parliament | Imperfect Show

Next Post

“சாதி ஓட்டுக்களுக்காக சமூக நீதியில் மெத்தனப்போக்கு” – திமுக அரசுக்கு எதிராக சீறும் கௌசல்யா |“Caste Vote Politics Weakens Social Justice, Slams Kausalya Against DMK Government”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சாதி ஓட்டுக்களுக்காக சமூக நீதியில் மெத்தனப்போக்கு” – திமுக அரசுக்கு எதிராக சீறும் கௌசல்யா |“Caste Vote Politics Weakens Social Justice, Slams Kausalya Against DMK Government”

"சாதி ஓட்டுக்களுக்காக சமூக நீதியில் மெத்தனப்போக்கு" - திமுக அரசுக்கு எதிராக சீறும் கௌசல்யா |“Caste Vote Politics Weakens Social Justice, Slams Kausalya Against DMK Government”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In