தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை, மாறாக முதலீடு செய்து வருகின்றன. சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
பருவமழை பெய்து வருவதால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. விலைவாசி உயற்வை குறிக்கும் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. தனியார் முதலீடுகள் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு சரிவிலிருந்து மீண்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
