Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்திற்க்கு சீனா பெயர் வைப்பது முட்டாள்தனம்: வெளியுறவுத்துறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்திற்க்கு சீனா பெயர் வைப்பது  முட்டாள்தனம்: வெளியுறவுத்துறை
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அருணாசல பிரதேசத்தின் 30 பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றிய விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அருணாசல பிரேதசத்தை தொடா்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அம் மாநிலத்துக்கு ‘ஷாங்னான்’ என்று பெயரிட்டுள்ளது. தெற்கு திபெத்தின் அங்கமான ஷாங்னான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அருணாசலில் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு 30 புதிய பெயா்களைக் கொண்ட 4-ஆவது பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது.

ஏற்கெனவே 2017, 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் மூன்று கட்டமாக அருணாசல் பிரதேச பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றி வெளியிட்டிருந்தது.

சீனாவின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்திய மாநிலமான அருணாசல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்துள்ளது முட்டாள்தனமான முயற்சி. இதுபோன்ற முயற்சிகளை இந்திய அரசு எதிர்க்கிறது.

பெயர் மாற்றி அறிவிப்பதன் மூலம் இந்தியாவின் அங்கம் அருணாசல் பிரதேசம் என்பதை மாற்றிவிட முடியாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “உங்களுடைய வீட்டுக்கு நான் பெயரை மாற்றுவதன் மூலம், அது எனக்கு சொந்தமாகிவிடுமா? அருணாசல பிரதேசம் இந்திய மாநிலம். எதிா்காலத்திலும் அது இந்திய மாநிலம்தான். அந்த மாநிலத்திலுள்ள இடங்களுக்கு பெயா்களை மாற்றுவதன் மூலம் எதுவும் நடந்துவிடாது’ என்றாா்.

.

Previous Post

அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதுபோல் கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்தியாவிடமிருந்து இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை: ஸ்ரீலங்கா

Next Post

ரூ.500 கோடியும் கொடுத்து எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினார்கள், ஆனால் நான் பாஜகவில் சேரவில்லை : அதனால்தான்…..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.500 கோடியும் கொடுத்து எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினார்கள், ஆனால் நான் பாஜகவில் சேரவில்லை : அதனால்தான்…..

ரூ.500 கோடியும் கொடுத்து எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினார்கள், ஆனால் நான் பாஜகவில் சேரவில்லை : அதனால்தான்.....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In