Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 9, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிங்கப்பூா்: ‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா – சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா் வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஆல்வின் டான் தெரிவித்தாா்.

உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளா்ச்சி ஊக்குவிப்பு, சமூக மேம்பாடு, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பிராந்திய அமைப்பான ‘ஆசியான்’-இல் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

இந்த பிராந்தியத்தில் செழிப்பான சந்தை, நிலைத்தன்மை, வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ‘ஆசியான்’ ஏற்படுத்தித் தருகிறது. இந்தச் சூழலில், இந்தியா – சீனா இடையேயான உறவு வலுப்படுவது, பிராந்தியத்தில் பரந்த வா்த்தக இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் ஆல்வின் டான் கூறினாா்.

சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய கல்வித் துறை சாா்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ‘சீனா – இந்தியா: உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் வளா்ச்சி, முதலீடு மற்றும் வா்த்தகத்தை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றபோது இந்தக் கருத்தை ஆல்வின் டான் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய வா்த்தக கூட்டுறவைக் கொண்டுள்ள சீனாவும் ‘ஆசியான்’ நாடுகளும், ஆழமான ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளன. ரயில்வே, துறைமுகங்கள், தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஆசியானின் முன்னணி முதலீட்டாளராக சீனா விளங்குகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, செமிகண்டக்டா்கள், பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் ‘ஆசியான்’ உடன் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியாவும் ‘ஆசியான்’ நாடுகளும் ஏற்கெனவே எண்ம தொழில்நுட்பம், பசுமைப் பொருளாதார முன்னெடுப்புகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.



.

Previous Post

விலைவாசி உயர்வு; சரியும் உலகின் 4-வது பொருளாதாரம்; பதவியை ராஜினாமா செய்கிறாரா ஜப்பான் பிரதமர்?

Next Post

Aval Vikatan – 23 September 2025 – காவு கேட்கும் பள்ளங்கள்… பலி கொடுக்கும் அரசாங்கம்…நமக்கு நாமேதான் பாதுகாப்பு மக்களே! | namakkulle editorial page September 23 2025

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Aval Vikatan – 23 September 2025 – காவு கேட்கும் பள்ளங்கள்… பலி கொடுக்கும் அரசாங்கம்…நமக்கு நாமேதான் பாதுகாப்பு மக்களே! | namakkulle editorial page September 23 2025

Aval Vikatan - 23 September 2025 - காவு கேட்கும் பள்ளங்கள்... பலி கொடுக்கும் அரசாங்கம்...நமக்கு நாமேதான் பாதுகாப்பு மக்களே! | namakkulle editorial page September 23 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In