வங்கதேச சுழற்பந்து வீச்சு ஒரளவு பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில் கேப்டன் ரோஹித் சா்மா ஸ்பின் பௌலிங்கை எதிா்கொள்வதில் கவனம் செலுத்தினாா். ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், முகமது சிராஜ் ஆகியோரும் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனா். இந்திய அணிக்கு மேலும் 2 கட்ட பயிற்சி உள்ளது.
வங்கதேச வீரா்களும் கடும் பயிற்சி
பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி கைப்பற்றிய உற்சாகத்துடன் வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. கேப்டன் நஜ்முல் ஷண்டோ, மற்றும் இதர வீரா்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனா். சென்னை பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு தோதாக இருக்கும் என்பதால் அந்த அணியின் ஸ்பின்னா்கள் கடுமையாக பயிற்சி செய்தனா்.
வங்கதேச அணி இதுவரை ஒரு டெஸ்ட்டில் கூட இந்தியாவை வென்றதில்லை. மொத்தம் ஆடிய 13 ஆட்டங்களில் 11=இல் தோல்வி கண்டது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
