Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இறங்கி அடிக்கும் “ரெட் டீமிங்” – ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவம் கையாண்ட புதிய போர் வியூகம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2025
in அரசியல் செய்திகள்
0
இறங்கி அடிக்கும் “ரெட் டீமிங்” – ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவம் கையாண்ட புதிய போர் வியூகம்..!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 27, 2025 2:37 PM IST

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

News18News18
News18

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவம் புதிய போர் வியூகத்தை கையாண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் பயன்படுத்திய “ரெட் டீமிங்” உருவானது எப்படி?.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில், பயங்கரவாதிகளால் 26 பேர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்டுக்கொண்டிருந்த பயங்கரவாத முகாம்களின் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் போது, இந்திய ராணுவம், முதல் முறையாக “ரெட் டீமிங்” என்ற வியூகத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெட் டீமிங் என்பது எதிரியின் மனநிலை, தந்திரங்கள் மற்றும் எதிர்வினை முறைகளை நன்கு அறிந்த ஒரு சிறிய நிபுணர் குழுவைக் கொண்டு திட்டமிடுவதாகும். உண்மையான தாக்குதல்களைப் போன்று உருவகப்படுத்தி, எதிரிகள் எவ்வாறு செயல்படுகின்றனர், அவர்களின் பலவீனங்கள் என்ன என்பதை கண்டறிவதே ரெட் டீமிங் குழுவின் முக்கிய பணியாகும். ரெட் டீமிங் குழு, எதிரிகளின் தந்திரங்களை உருவகப்படுத்தி, blue team எனப்படும் தற்காப்புப் படைக்கு எதிராக கற்பனையான தாக்குதல்களை நடத்தும்.

மேலும் எதிரிகளின் மீது பயன்படுத்தப்பட உள்ள ராணுவ தளவாடங்களையும் அவற்றின் தயார் நிலையையும் ரெட் டீமிங் குழு சோதிக்கும். இக்குழுவில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிக முக்கிய 5 மூத்த உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக பல நாடுகள் இந்த வியூகத்தை பயன்படுத்தி உள்ளன.

இந்தியாவில் இந்த வியூகம் விதுர் வக்தா (Vidur Vakta) என்றழைக்கப்படுகிறது. மகாபாரதத்தில் வரும் விதுரன் கதாபாத்திரத்தின் அடிப்படையில் இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. விதுரன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆலோசகராக இருந்ததாக கூறப்படுகிறது. 2024 அக்டோபரில் நடந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டில் ரெட் டீமிங்-கை உருவாக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்களை தெரிவிக்கின்றன. பின்னர் 15 அதிகாரிகள் கொண்ட குழு ரெட் டீமிங்கில் சிறப்புப் பயிற்சி பெற்றது.

இந்திய ராணுவத்தில் ஏற்கனவே red forces குழு உள்ளது. இதன் தலைமையகம் சிம்லாவில் அமைந்துள்ளது. red forces குழுவினர் காகிதம் மற்றும் மணல் மாடல்களை உருவாக்கி, அதில் போர் பயிற்சி பெறுகிறார்கள். red forces எதிரியின் தந்திரங்களை உருவகப்படுத்தி பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக இருந்தாலும், ரெட் டீமிங் சொந்த திட்டங்களையும் எதிரியின் மீதான அவற்றின் தாக்கத்தையும், ஆய்வு செய்து தாக்கும் திறன் கொண்டது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu



.

Previous Post

‘திமுக கவுன்சிலரிடம் துப்பாக்கி.. அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி’ இபிஎஸ் கண்டனம்!

Next Post

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல; அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சி.. திமுகவை விளாசும் விஜய்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல; அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சி.. திமுகவை விளாசும் விஜய்!

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல; அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சி.. திமுகவை விளாசும் விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In