Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிகாலையில் டெல்லி நோக்கி வந்த 2 பாகிஸ்தான் ஏவுகணைகள்.. அரணாக காத்த இந்திய வான் பாதுகாப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 17, 2025
in அரசியல் செய்திகள்
0
அதிகாலையில் டெல்லி நோக்கி வந்த 2 பாகிஸ்தான் ஏவுகணைகள்.. அரணாக காத்த இந்திய வான் பாதுகாப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 10, 2025 7:04 AM IST

பாகிஸ்தான் ஏவிய 2 ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு ஹரியானாவில் அழித்தது.

News18News18
News18

அதிகாலையில் டெல்லி நோக்கி வந்த 2 பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துள்ளது. 

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், 3ஆவது நாளாக நேற்று மாலையிலேயே பாகிஸ்தான் டிரோன் மூலம் இந்தியாவின் எல்லையோர மாவட்டங்களில் தாக்குதலை ஆரம்பித்தது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநில எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் டிரோன்கள் பறந்த பகுதிகளின் மீது உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் எல்லைப் பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கியது. இருள் சூழ்ந்த வானில் ஒளிப்புள்ளியாகத் தெரிந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்திய ராணுவம் உடனுக்குடன் முறியடித்தது.

இதனைத்தொடர்ந்து காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீதும் பாகிஸ்தான் டிரோன்களை வீசித் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது. எனினும் அவற்றை இந்திய ராணுவம் வான் பரப்பிலேயே அழித்தது.  காஷ்மீரின் வடக்கில் பாரமுல்லா தொடங்கி தெற்கே பூஞ்ச் வரை 26 இடங்களில் டிரோன்கள் காணப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஜம்மு நகர், சம்பா, உதம்பூர், பூஞ்ச் பகுதிகளில் டிரோன்கள் பறந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், இன்று அதிகாலையில் டெல்லி நோக்கி ஃபத்தே 2 ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. இதனை ஹரியானாவின் சிர்சாவில் வழிமறித்து இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துள்ளது.



.

Previous Post

திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய சடலம்!

Next Post

தொடரும் அமலாக்கத்துறை விசாரணை; முதல்வர் உறவினர்.. 6 மாதங்களில் அசுர வளர்ச்சி; கொட்டும் கோடிகள்!-யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொடரும் அமலாக்கத்துறை விசாரணை; முதல்வர் உறவினர்.. 6 மாதங்களில் அசுர வளர்ச்சி; கொட்டும் கோடிகள்!-யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்

தொடரும் அமலாக்கத்துறை விசாரணை; முதல்வர் உறவினர்.. 6 மாதங்களில் அசுர வளர்ச்சி; கொட்டும் கோடிகள்!-யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In