Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்திய விமானப்படை சிவில் இன்ஜினியர் சுட்டுக்கொலை.. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 30, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்திய விமானப்படை சிவில் இன்ஜினியர் சுட்டுக்கொலை.. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 29, 2025 4:46 PM IST

இந்திய விமானப்படை சிவில் இன்ஜினியர் எஸ்.என். மிஷ்ரா உத்தரப்பிரதேசத்தில் அவரது இல்லத்தில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News18News18
News18

இந்திய விமானப்படை சிவில் இன்ஜினியர் தனது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் வசித்துவந்தவர் விமானப்படை சிவில் இன்ஜினியர் எஸ்.என். மிஷ்ரா (51). இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்துவந்தார். இந்நிலையில், நேற்று அவர் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டை நெருங்கிய ஒரு மர்ம நபர் எஸ்.என்.மிஷ்ரா உறங்கிக்கொண்டிருந்த அறையின் வழியாக துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டுள்ளார். இதில், மிஷ்ராவின் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. பின், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையும் படியுங்கள் : 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. ”ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது” – அமித்ஷா

அதேசமயம், துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்த எஸ்.என்.மிஷ்ராவின் மனைவி, அவரது கணவரை ரத்த வெள்ளத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உடனடியாக எஸ்.என்.மிஷ்ராவை இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

துப்பாக்கி சூடு குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர். இதில் முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் எஸ்.என்.மிஷ்ரா வீட்டினுள் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்ததும், பின் அங்கிருந்து தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து போலீஸார் தொடர்ந்து விசாரணையை நடத்திவருகின்றனர்.

First Published :

March 29, 2025 4:46 PM IST



.

Previous Post

நவராத்திரி: ‘வழிபாட்டு தலத்திலிருந்து 500 மீ., தூரத்திற்கு இறைச்சி விற்க தடை’ உபி., யோகி அரசு அதிரடி!

Next Post

Chennai Weather 29 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.51°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Chennai Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.35°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Chennai Weather 29 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.51°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In