Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதினின் வருகைக்கு முன்னதாக புதிய எஸ்-400 ஒப்பந்தத்தை உறுதி செய்யும் இந்தியா… காரணம் என்ன தெரியுமா…? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2025
in அரசியல் செய்திகள்
0
புதினின் வருகைக்கு முன்னதாக புதிய எஸ்-400 ஒப்பந்தத்தை உறுதி செய்யும் இந்தியா… காரணம் என்ன தெரியுமா…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 09, 2025 12:45 PM IST

இந்தியா தனது வான்வெளி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ரஷ்யாவுடன் புதிய எஸ்-400 ஒப்பந்தத்தை கையெழுத்திட முடிவு செய்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகைக்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

Rapid Read
News18News18
News18

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதில் மூன்று அமைப்புகள் நேரடியாக ரஷ்யாவிலிருந்து பெறப்படவுள்ளன, மற்ற இரண்டு அமைப்புகள் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் அடிப்படையில் இந்தியாவின் தனியார் நிறுவனங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-இல் ஒப்பந்தமாகிய விலையை அடிப்படையாகக் கொண்டு, வருடாந்திர உயர்வுடன் கூடிய புதிய விலையையும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

புதின் வருகைக்கு முன்பு ஒப்பந்தம் உறுதி

“ஆபரேஷன் சிந்தூர்” வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட முடிவு செய்திருக்கிறது. இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய, ரஷ்ய பிரதிநிதிகளை விரைவில் சந்திக்க உள்ளனர். புதின் டிசம்பரில் இந்தியாவிற்கு வரவிருப்பதால், அவரது வருகைக்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஒப்பந்தத்தின் தொடர்ச்சி

2018 அக்டோபர் 5-ஆம் தேதி கையெழுத்தான $5.43 பில்லியன் மதிப்புள்ள முதன்மை ஒப்பந்தத்தின் கீழ், ஐந்து எஸ்-400 ஏவுகணை அமைப்புகளில், இரண்டு 2026 இறுதிக்குள் வழங்கப்படும். தற்போது பேசப்படும் கூடுதலான ஐந்து ஏவுகணை அமைப்புகள், இந்தியாவின் 7,000 கிலோமீட்டர் நீளமான கடற்கரை பாதுகாப்பையும், வடக்கு பகுதியின் வான் பாதுகாப்பு இடைவெளிகளையும் கையாள உதவும் என்று கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூரில் எஸ்-400இன் பங்கு

“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போது எஸ்-400 அமைப்பு மிக முக்கிய பங்காற்றியது. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தடுப்பதில், அதன் மேம்பட்ட ரேடார் மற்றும் பல இலக்குகளைக் கொண்ட கண்காணிப்பு திறன்கள் முக்கிய பங்காற்றின. குறிப்பாக, மே 7-8 தேதிகளில் பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட பல வான்வழி அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்ததன் மூலம் இந்தியாவின் வான்வெளி பாதுகாப்புத் திறனை இது உறுதிப்படுத்தியது.

புதினின் இந்திய வருகை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வருகிற டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தும் 23-வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாகும். மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது என்பதால், இதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவுக்கு வருவார் என்றும், ஐ.நா. பொதுச் சபையின் 80-வது அமர்வின்போது, அவர் தனது இந்திய வருகையை உறுதிப்படுத்தியதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

எஸ்-500 பற்றிய தகவல்கள் தவறு

அதே நேரத்தில், இந்தியா எஸ்-500 ஏவுகணை அமைப்பை வாங்கவுள்ளதாக பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 09, 2025 12:45 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

புதினின் வருகைக்கு முன்னதாக புதிய எஸ்-400 ஒப்பந்தத்தை உறுதி செய்யும் இந்தியா… காரணம் என்ன தெரியுமா…?



.

Previous Post

கழுகார்: வெளிவந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்; கலக்கத்தில் தந்தை – மகன் டு கொதிக்கும் உடன்பிறப்புகள்!

Next Post

"பாஜக புதிய அடிமைகளையும் தேடி வருகிறது" – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Udhayanidhi Stalin: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது அதிமுகவினர் தாக்குதல்: “அதிமுக ஐசியூவில் அனுமதிக்கப்படும்” – உதயநிதி தாக்கு

"பாஜக புதிய அடிமைகளையும் தேடி வருகிறது" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In