Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு… பெரு வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2025
in அரசியல் செய்திகள்
0
உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு… பெரு வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்பு | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 16, 2025 7:12 PM IST

உத்தராகண்ட் டேராடூனில் மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக வீடுகள் சேதம், 3 பேர் உயிரிழப்பு.

News18News18
News18

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழையால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. திங்கட்கிழமை காலை முதலே கனமழை பெய்து வந்த நிலையில், இரவில் டேராடூனில் மேகவெடிப்பால் வானத்தில் இருந்து அருவி போல் மழை கொட்டியது. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது.

இதே போன்று, நிலச்சரிவால் வீடுகள் மற்றும் சாலைகளும் பலத்த சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மழை, வெள்ளத்தால் பாதித்த இடங்களை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொக்லைன் வாகனத்தில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், மழை, வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக கூறினார்.

#WATCH | Uttarakhand | Tamsa river in spate and Tapkeshwar Mahadev temple inundated as heavy rainfall lashes Dehradun.


Temple priest Acharya Bipin Joshi says, “The river started flowing heavily since 5 AM, the entire temple premises were submerged… This kind of situation had… pic.twitter.com/4E6PhKBM6K

— ANI (@ANI) September 16, 2025

டேராடூனில் பிரேம் நகர் பகுதியில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. இதனால், அந்த பகுதியே கடல் போல் காட்சியளித்தது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.

மழை, வெள்ளத்தால் டேராடூன் – ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

देहरादून के मालदेवता में अतिवृष्टि से प्रभावित क्षेत्रों का स्थलीय निरीक्षण कर अधिकारियों को आवश्यक दिशा–निर्देश दिए। आपदा के इस मुश्किल समय में हम प्रत्येक प्रभावित परिवार के साथ खड़े हैं। pic.twitter.com/74f6QKpE6N


— Pushkar Singh Dhami (@pushkardhami) September 16, 2025

சஹஸ்த்ரதாரா பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேறு, சகதியுடன் வெள்ளம் பாய்ந்தோடியது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் மண்ணில் புதையுண்டன.

கனமழை காரணமாக ரிஷிகேஷில் சாலைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து ஆறு போல் காட்சியளித்தது.  இதனால், சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதே போன்று அங்குள்ள தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் ரயில் போக்குவரத்து முடங்கியது.

ரிஷிகேஷில் சந்தரபாகா ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி மீட்டனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Uttarkashi,Uttarakhand (Uttaranchal)

First Published :

September 16, 2025 7:12 PM IST



.

Previous Post

Diwali Malar – 31 October 2021 – சீன தேசத்தில் ஒரு தமிழ்க் கோயில் : குவாயின் அம்மன் | Tamil temple in china

Next Post

`பாமக உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்..!' – உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`பாமக உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்..!' – உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

`பாமக உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்..!' - உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In