Last Updated:
கட்டப்பனை உணவக கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி ஜெயராமன், மைக்கேல், சுந்தரபாண்டியன் உயிரிழந்தது இடுக்கியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரளாவில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், மைக்கேல் என்ற செல்வன், சுந்தரபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் மூன்று பேரும் மயக்கமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் கட்டப்பனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மூவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் சென்ற மைக்கேல் வர தாமதமானதால், ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே இறங்கியபோது மயக்கமுற்றார். அவரைத் தொடர்ந்து சுந்தரபாண்டியனும் தொட்டியில் இறங்கியபோது மயக்கமடைந்து உயிரிழந்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
October 01, 2025 4:29 PM IST

