Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘விலங்குகளை கையகப்படுத்துதலில் எந்த விதிமீறலும் இல்லை’ – வந்தாரா குறித்து சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2025
in அரசியல் செய்திகள்
0
‘விலங்குகளை கையகப்படுத்துதலில் எந்த விதிமீறலும் இல்லை’ – வந்தாரா குறித்து சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 15, 2025 4:23 PM IST

விலங்குகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான ஒரு மையமாக செயல்படும் வந்தாரா சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது

வந்தாராவந்தாரா
வந்தாரா

வந்தாராவில் விலங்குகளை கையகப்படுத்துதலில் எந்த விதிமீறலும் செய்யப்படவில்லை என்று சிறப்பு விசாரணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் வந்தாரா என்கிற விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இது ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் தொலைநோக்கு பார்வையால் தொடங்கப்பட்டது. இந்த மையமானது “வனத்தின் நட்சத்திரம்” எனப் பொருள்படும். இது உலகின் மிகப்பெரிய விலங்கு நல மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

இந்த மையம் ஜாம்நகரில் உள்ள மோட்டிகாவடி கிராமத்தில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறப்புப் பாதுகாப்பு மண்டலம் உள்ளது. துன்புறுத்தப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது காயமடைந்த விலங்குகளை மீட்டு அவற்றைப் பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்கான ஒரு மையமாக செயல்படும் வந்தாரா சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

விலங்குகளுக்காக இங்கு அதிநவீன மருத்துவமனைகள், தனித்தனி ஆராய்ச்சி மையங்கள், நவீன அறுவை சிகிச்சை அறைகள், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் பிற நோய் கண்டறியும் கருவிகள் கொண்ட மருத்துவமனைகள் உள்ளன.

இந்நிலையில் சில வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சில அரசு சாரா அமைப்புகளால் எழுப்பப்பட்ட புகார் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வந்தாரா விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் குறித்து விசாரிக்குமாறு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைத்தது.

இந்த சூழலில் சிறப்பு விசாரணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், விலங்குகளைக் கையகப்படுத்துவதில் எந்தவித விதிமீறலும் இல்லை என்றும், சட்டவிதிகளின்படி அனைத்து நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் பன்கஜ் மிட்டல் மற்றும் பி.பி. வரலே அடங்கிய அமர்வு இவை நமது நாட்டின் பெருமைக்குரிய விஷயங்கள். தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 15, 2025 4:23 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘விலங்குகளை கையகப்படுத்துதலில் எந்த விதிமீறலும் இல்லை’ – வந்தாரா குறித்து சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்



.

Previous Post

ஐடிஆர் இணையதளம் முடங்கியதால் பயனர்கள் அவதி!

Next Post

இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In