Last Updated:
இந்தியா முதல் முறையாக S 400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்தது.
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ஆபரேஷனை நடத்தி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை அழித்தது.
இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையோர கிராம மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 16 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும், நேற்று இரவு இந்திய எல்லையோர நகரங்களில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த அனைத்து தாக்குதலையும், இந்தியா ராணுவம் முறியடித்தது என இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதனை உறுதி செய்தார். இந்நிலையில், இந்தியா முதல் முறையாக S 400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தியுள்ளது.
S 400-ன் சிறப்புகள் என்ன? ரஷ்யாவிடம் இருந்து இந்தியா S 400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது. இதன் ரேடார் அமைப்பு மிகவும் மேம்பட்டது. இதன் ரேடார் மூலம், 600 கி.மீ. வரம்பிற்குள் சுமார் 300 இலக்குகளைக் கண்காணிக்க முடியும். ஆசிய கண்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே S 400 வான் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது.
400 சுதர்சன் சக்ரா என்பது அதிநவீன ஏவுகணை. இது, டிரோன் முதல் ஏவுகணைகளை வரை இடைமறித்து தாக்கி அழிக்கும். அதேபோல், 40 கி.மீ. முதல் 400 கி.மீ வரை பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமின்றி, 100 அடி முதல் 40,000 அடி உயரத்தில் பறந்து சென்று எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்டது.

