Last Updated:
Fact Check | இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்ட உண்மை சரிபார்ப்பில் பழைய சம்பவங்களில் விமானங்கள் விபத்துக்குள்ளான படங்களை உண்மையை திரித்து பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியிடப்படுவதாக ஆதாரத்துடன் நிரூபித்தது.
இந்தியா மீது நொடிக்கு பல ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் தரப்பில் பகிரப்பட்ட வீடியோக்களின் உண்மை தன்மையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிக்குப் பிறகு, பல பாகிஸ்தான் ஊடகங்கள், ரஃபேல் உட்பட 5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதாக கூறின. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இதே விஷயத்தை சொல்லி இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதாக தெரிவித்தார். பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேச ஊடகங்களிலும், ஒரு ரஃபேல் உட்பட 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன.
சில விமான பாகங்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின. ஆனால், இதனை மறுத்துள்ள இந்திய அரசு அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டிருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்ட உண்மை சரிபார்ப்பில் பழைய சம்பவங்களில் விமானங்கள் விபத்துக்குள்ளான படங்களை உண்மையை திரித்து பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியிடப்படுவதாக ஆதாரத்துடன் நிரூபித்தது.
இதற்கிடையே, நேற்றிரவு எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் நேற்றிரவு நடத்திய தாக்குதலை காட்டும் விதமாக “இந்தியா மீதான உண்மையான பாகிஸ்தான் தாக்குதல்” என்று கூறி ஒரு வீடியோ பாகிஸ்தான் தரப்பில் இருந்து பகிரப்பட்டு இருந்தது.
மல்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம்ஸ் எனப்படும் ஆயுதங்களை கொண்டு தொடர்ச்சியாக இந்தியாவை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்படுவது போன்று காட்சிகள் வெளியாகி இருந்தன. ஒரு நொடியில் பல ஏவுகணைகள் செலுத்தப்படுவதும் போன்ற அந்தக் காட்சிகள் உண்மையான தாக்குதல் இல்லை என்று இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்ட உண்மை சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.
🚨 Pakistan Propaganda Alert!
A video showing a heavy MLRS (Multiple Launch Rocket Systems) barrage is being falsely shared as a real Pakistani attack on India.#PIBFactCheck✅ The video is from a video game and has been online for over 3 years.
✅ It has no connection to… pic.twitter.com/VXAE93YfXs
— PIB Fact Check (@PIBFactCheck) May 9, 2025
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இந்தியா மீதான உண்மையான பாகிஸ்தான் தாக்குதல் என்று தவறான காணொளி பகிரப்படுகிறது. இந்த காணொளி ஒரு வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீடியோ இணையத்தில் உலா வருகிறது. இதற்கும் தற்போதைய இந்தியா-பாகிஸ்தான் நிலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே இதுதொடர்பான உண்மையான கேமிங் வீடியோவையும் PIB ஷேர் செய்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
நொடிக்கு பல ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது உண்மையா? – ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா!


