இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Announced!
A look at #TeamIndia's fixtures for the 5⃣-match Test series against England in 2025 #ENGvIND pic.twitter.com/wS9ZCVbKAt
— BCCI (@BCCI) August 22, 2024
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் விவரம்
முதல் டெஸ்ட் – ஹெட்டிங்லி, லீட்ஸ் (ஜூன் 20 – ஜூன் 24)
2-வது டெஸ்ட் – எட்ஜ்பாஸ்டன், பிர்மிங்ஹம் (ஜூலை 2 – ஜூலை 6)
3-வது டெஸ்ட் – லார்ட்ஸ், லண்டன் (ஜூலை 10 – ஜூலை 14)
4-வது டெஸ்ட் – ஓல்டு டிரஃபோர்டு, மான்செஸ்டர் (ஜூலை 23 – ஜூலை 27)
5-வது டெஸ்ட் – ஓவல், லண்டன் ( ஜூலை 31 – ஆகஸ்ட் 4)
