‘பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்தது பாகிஸ்தான்’
மேலும், எல்லை அருகே உள்ள பள்ளிகள் மற்றும் மதத் தலங்களை பாகிஸ்தான் குறிவைத்தது குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில்,” மே 7 ஆம் தேதி அதிகாலையில் எல்லை பகுதி முழுவதும் கடுமையான ஷெல் தாக்குதலின் போது, பூஞ்சில் உள்ள கிறிஸ்ட் பள்ளிக்குப் பின்னால் பாகிஸ்தானில் இருந்து வீசப்பட்ட ஷெல் விழுந்தது. அந்த ஷெல் பள்ளியின் இரண்டு மாணவர்களின் வீட்டைத் தாக்கியது, அவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிர் இழந்தனர், அவர்களின் பெற்றோர் காயமடைந்தனர்.
