நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்ச நேரம் போக்குக்காட்டிய ரவீந்திர ஜடேஜா ஒரு சில சிக்ஸர் – பவுண்டரிகளை பறக்கவிட்டார். அவர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னில் வீழ்ந்தார்.
நியூசிலாந்து அணித் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
53 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்சல் சான்ட்னரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.
45.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி நியூசிலாந்தைவிட 103 ரன்கள் பின்தங்கியுள்ளது.
