Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உலகளாவிய ட்ரோன் வல்லரசாக இந்தியா மாறி வருகிறது… பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ்குமார் பிரத்யேக தகவல்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 21, 2025
in அரசியல் செய்திகள்
0
உலகளாவிய ட்ரோன் வல்லரசாக இந்தியா மாறி வருகிறது… பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ்குமார் பிரத்யேக தகவல்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 20, 2025 3:25 PM IST

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், பாதுகாப்பில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.

News18News18
News18

உலகளாவிய ட்ரோன் வல்லரசாக மாறும் இலக்குடன் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கான கருவிகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், இந்தியா இந்தப் பிரிவில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக இந்திய பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளின் வாயிலாக, உலகளாவிய ட்ரோன் வல்லரசாக மாற இந்தியா தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். சிஎன்என் நியூஸ்18-க்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், இராணுவத்தில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களின் உள்நாட்டு கொள்முதல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இந்தியா இந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் சமீபத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதல் என உலகளாவிய போர்ப்பதற்றம் அதிகரித்து வருவதால், இத்தகைய மோதல்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுக்கான தேவையும் உயர்ந்து, இந்திய பாதுகாப்புக்கான ஏற்றுமதியை கணிசமாக உயர்த்தியுள்ளது. “இதுவரை நமது மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தமாக, பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு கையெழுத்தாகியுள்ளது. இது 2030க்குள் ரூ.50,000 கோடி ஏற்றுமதி இலக்கை நெருங்கும் முக்கியமான மைல்கல்லாகும்” என்றும் ராஜேஷ் குமார் சிங் கூறினார்.

இந்தியா தற்போது வான், கடல் மற்றும் தரை படைகளில் ஆளில்லா போர்க்கருவிகள் குறித்த அமைப்புகளுக்கான ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் சுயநிறைவை வளர்த்து, உலக சந்தையிலும் இந்தியாவின் பங்கு அதிகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில், “2015இல் உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த இந்தியா, இன்று முதல் ஏற்றுமதி செய்யும் 25 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டமிட்ட வளர்ச்சியின் பின்னணியில், உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்துள்ளது. தற்போது, 100-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட் லாஞ்சர்கள், சிமுலேட்டர்கள், கவச வாகனங்கள், டோர்னியர் விமானங்கள் மற்றும் கடல் ரோந்துக் கப்பல்கள் போன்ற அதிநவீன ராணுவ உபகரணங்களை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. இதனாலேயே, 2023–24 நிதியாண்டில் பாதுகாப்புத்துறையின் ஏற்றுமதி முப்பது மடங்கு அதிகரித்து, ரூ.23,622 கோடியைத் தொட்டுள்ளது.

இவ்வாறாக, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், பாதுகாப்பில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 20, 2025 3:25 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

உலகளாவிய ட்ரோன் வல்லரசாக இந்தியா மாறி வருகிறது… பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ்குமார் பிரத்யேக தகவல்…



.

Previous Post

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஏன்? அமெரிக்கா தலையிடுமா? – முழுமையான அலசல்! | களம்: Iran vs Israel

Next Post

சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In