புதுடில்லி: முதல்வர் ஸ்டாலினை இண்டியா கூட்டணி தலைவர்கள் திசை திருப்புகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நிர்மலா சீதாராமன் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4 தென் மாவட்டங்களில் அமித்ஷா தலையீட்டின் பேரில் கூடுதல் மீட்புப் படைகள் சென்றுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவுடன் இணைந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
தற்போதைய பணியிலிருந்து முதல்வர் ஸ்டாலினை இண்டியா கூட்டணி தலைவர்கள் திசைதிருப்புகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்
லோக்சபாவில் லோன் ஆப்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: லோன் ஆப்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள், மக்களை மோசடி செய்து வருவதாக நாடு முழுவதும் புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.
கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 4 ஆயிரம் கடன் ஆப்களை கூகுள் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், 2500க்கும் மேற்பட்ட மோசடி கடன் ஆப்களை தனது ‘பிளே ஸ்டோரில்’ இருந்து நீக்கியும், முடக்கியும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


சொல்வதற்கு ஒன்றுமில்லை