புதுடில்லி: இண்டியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் காங்., மூத்த தலைவர் சோனியா, ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. கூட்டணி கட்சியினரின் நான்காவது ஆலோசனை கூட்டம் இன்று(டிச.,19) நடந்தது. தொகுதி பங்கீடு, கூட்டாக இணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்திய சட்டசபை தேர்தல் தோல்வி மற்றும் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி டி.ஆர் பாலு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கார்கே, ராகுல், ஆர்ஜேடி தலைவர் லாலு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

