Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியா 3-0*..! கடைசி ஒருநாள் போட்டியிலும் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 12, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியா 3-0*..! கடைசி ஒருநாள் போட்டியிலும் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்று அசத்தியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் அதிகபட்சமாக துணைக் கேப்டன் ஷுப்மன் கில் 112 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களிலும், விராட் கோலி 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்வரிசையில் அதிரடிகாட்டிய விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 29 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையும் படிக்க.. விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய ஆதில் ரஷித்!

அடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் அதிவேகத்தில் இலக்கை விரட்டினர். இதனால், ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 4 பவுண்டரியுடன் 23 ரன்களும் பென் டக்கெட் 8 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் அறிமுக வீரராக களமிறங்கிய பாண்டன் 2 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 38 ரன்களும் குவித்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 24 ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பந்து வீச்சாளர் கஸ் அகிட்சன் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். இருப்பினும் அவரால் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. 19 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் விளாசிய கஸ் அகிட்சன் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

முடிவில் 34.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ராணா, ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இவ்விரு அணிகளும் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி இங்கிலாந்தின் ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க.. சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை! ஐபிஎல்லில் பங்கேற்பாரா?



.

Previous Post

TVK : `கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட…' – சீமானுக்கு தவெக பதில்!

Next Post

குட் நியூஸ் மக்களே.. குஷியில் நகைப்பிரியர்கள்.. தங்கம் விலை குறைந்தது.. இதோ இன்றைய நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குட் நியூஸ் மக்களே.. குஷியில் நகைப்பிரியர்கள்.. தங்கம் விலை குறைந்தது.. இதோ இன்றைய நிலவரம்!

குட் நியூஸ் மக்களே.. குஷியில் நகைப்பிரியர்கள்.. தங்கம் விலை குறைந்தது.. இதோ இன்றைய நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In