Last Updated:
டெல்லி மெட்ரோவில் பச்சை பிளாஸ்டிக் சேரில் அமர்ந்த சிறுமியின் புகைப்படம் r/Delhi ரெடிட்டில் வைரலாகி, நெட்டிசன்கள் அவளது புத்திசாலித்தனத்தை பாராட்டினர்.
நெரிசலான டெல்லி மெட்ரோ ரயில் பெட்டிக்குள் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியின் புகைப்படம் வைரலாகியுள்ளது. அந்தப் புகைப்படமானது ரெடிட்டில் r/Delhi என்ற கணக்கில் இருந்து பகிரப்பட்டது. அதில், மெட்ரோவில் தன் சொந்த சேரை கொண்டு வந்த குழந்தை, என்ற கேப்ஷன் உடன் பதிவிடப்பட்டது. சமீபத்தில் பதிவிடப்பட்ட இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக அலுவலக நேரங்களில், மெட்ரோவில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும், எனவே பல பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு சிறுமி இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மிகவும் வித்தியாசமான மற்றும் வேடிக்கையான வழியைக் கண்டுபிடித்துள்ளார்.
படத்தில், அந்த சிறுமி இரண்டு ஜடைகளை போட்டுக்கொண்டு ஒரு அழகான வெள்ளை நிற ஃபிராக் அணிந்திருக்கிறார், அது மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் இதை பார்க்கும்போது ஒரு அழகான சின்ன தேவதை அவருடைய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது.
வைரலாகும் அந்த பதிவில், ஒரு சிறுமி ரயில் பெட்டியின் நடுவில் சிறிய பச்சை நிற பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இதை பார்த்தால், அந்த சிறுமி தன்னுடைய சேரை வீட்டிலிருந்து கொண்டு வந்தது போல் தெரிகிறது. அவருக்கு அருகில் இருந்த அனைத்து சீட்களும் ஏற்கனவே நிரம்பியிருந்தன. எனவே இந்த சேரானது முழு பயணத்திற்கும் அவருக்கு சீட் கிடைத்ததை உறுதி செய்தது. இந்த படத்தைப் பார்க்கும்போது, அவள் பயணத்தை முழுமையாக அனுபவித்து கொண்டிருப்பது போல் தோன்றியது.
நீங்கள் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தால், மெட்ரோவில் சீட் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். பலர் சீட்டுக்காக சண்டையிடுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகளுக்கு கூட சீட்கள் கிடைப்பதில்லை. இதை அறிந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தனது சீட்டை ஏற்பாடு செய்திருக்கிறார்.
மெட்ரோ பெட்டியின் நடுவில் பச்சை நிற சேரில் அமர்ந்த இந்த சிறுமியை அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு பயணி, புகைப்படம் எடுத்து அதை ரெடிட்டில் பதிவிட்டார். இந்த புகைப்படம் வைரலானவுடன், சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த சிறுமியின் புத்திசாலித்தனத்தையும், தனித்துவமான தீர்வையும் பாராட்டி வருகின்றனர்.
சிலர், இப்போது அவளுக்கு மெட்ரோவில் சீட் கிடைத்தாலும், இல்லாவிட்டாலும், அந்த சிறுமி தன் தனிப்பட்ட சீட்டை எடுத்துக்கொண்டு மெட்ரோவில் எங்கும் உட்காரலாம் என்று கூறுகின்றனர். அதில் ஒரு யூசர், தனது சிறிய சிம்மாசனத்துடன் சிறிய ராணி, என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், சில ஆன்ட்டிகள் குழந்தைகளை சீட்டில் இருந்து தள்ளிவிட்டு உட்காருவார்கள் என்று கூறியுள்ளார்.
September 21, 2025 3:15 PM IST

