Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

IND Vs PAK; “கிரிக்கெட்டும் இரத்தமும் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?” – உத்தவ் தாக்கரே ஆவேசம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2025
in அரசியல் செய்திகள்
0
IND Vs PAK; “கிரிக்கெட்டும் இரத்தமும் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?” – உத்தவ் தாக்கரே ஆவேசம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரின் 17ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் பாகிஸ்தானுடன் இன்று மோத உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

பொதுவாக இந்தியா – பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டி பெரிய அளவில் கவனிக்கப்படும். ஆனால், இன்றைய போட்டி இன்னும் அதிக கவனம் பெற்றுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது. அதன்பின் பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, பாகிஸ்தானில் இருக்கும் 9 பயங்கரவாதி முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி அவை அனைத்தையும் அழித்தது.

இதற்கு பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லை கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு பின்னர், இரு நாட்டுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை மேற்கோள் காட்டியே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தற்போது, “இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்றால், கிரிக்கெட்டும் இரத்தமும் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தவ் தாக்கரே இது குறித்து பேசியதாவது, “பிசிசிஐ தேச விரோதமாக மாறி வருகிறது. பாகிஸ்தானுடன் விளையாடுவதில் ஏன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறது? இந்தியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பையை பாகிஸ்தானால் புறக்கணிக்க முடியும் என்றால், பிசிசிஐயால் ஏன் அதைச் செய்ய முடியாது? இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்றால், கிரிக்கெட்டும் இரத்தமும் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக பேசியுள்ள பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், “பன்னாட்டுப் போட்டிகளை ACC அல்லது ICC ஏற்பாடு செய்யும்போது, ​​நாடுகள் பங்கேற்க வேண்டியது கட்டாயம் மற்றும் அவசியமானது. போட்டிகளில் பங்கேற்காமல் புறக்கணித்தால், அணியின் புள்ளிகள் குறையும்.

இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. பாகிஸ்தான் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்தும் வரை இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்ற முடிவை நாங்கள் பல ஆண்டுகளாக எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 14, 2025 4:50 PM IST



.

Previous Post

வரலாற்றில் இந்து தீவிரவாதிகளே இல்லை: ஜகத்குரு ராமபத்ராச்சாரியார்

Next Post

பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம்!

பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In