Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்.. டெல்லியில் அரசு ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை ரத்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2025
in அரசியல் செய்திகள்
0
அதிகரிக்கும் போர் பதற்றம்.. டெல்லியில் அரசு ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை ரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 08, 2025 9:59 PM IST

இந்தியா ‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்தது. டெல்லியில் அரசு ஊழியர்களின் விடுப்பு ரத்து.

News18News18
News18

இந்தியா ‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை தாக்கி, அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும், இன்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலையும் பாகிஸ்தான் மேற்கொண்டது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்து தோல்வி அடையச் செய்தது. இதில், அதிநவீன S 400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இன்று இரவு, ஜம்மு & காஷ்மீரில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து அதனை முறியடித்திருக்கிறது. ஜம்மு பகுதியில், கட்ரா, அதன் அருகில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில், தெற்கு காந்திநகர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் விமானநிலையத்தைக் குறிவைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதனை முறியடித்து இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இவற்றை S 400 சுதர்சன் சக்கராவை பயன்படுத்தி தடுத்து முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ஜெ-17 போர் விமானத்தை இந்திய விமானப்படை எதிர்தாக்குதல் நடத்தி அதனை நொறுக்கியுள்ளது. சீனாவின் தயாரிப்பான ஜெ-17 போர் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, அதனை இந்திய ராணுவம் தகர்த்திறிந்துள்ளது.

ஜம்மு & காஷ்மீர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள முக்கிய மாவட்டங்களில் முழு பிளாக் அவுட் போடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலை மற்றும் அவசரகால நடவடிக்கைகளுக்கான தயார்நிலையைக் கருத்தில் கொண்டு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு வழங்கப்படக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

அதிகரிக்கும் போர் பதற்றம்.. டெல்லியில் அரசு ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை ரத்து



.

Previous Post

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘தங்கம் விலை உயர்வு’ மே 24, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

’ஓலை குடிசைகளுக்கும் சொத்து வரியா?’ திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிசாமி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’ஓலை குடிசைகளுக்கும் சொத்து வரியா?’ திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிசாமி!

’ஓலை குடிசைகளுக்கும் சொத்து வரியா?’ திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிசாமி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In