இதையும் படிக்க: 2025ல் தங்கத்தின் விலை ரூ.90,000 எட்டக்கூடும் என கணிப்பு!
கடந்த ஒரு மாதத்தில் 3,704 இருசக்கர வாகனங்களும், 138 மூன்று சக்கர வாகனங்களும் பதிவான நிலையில், அதேசமயம் இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் முறையே 1,800 மற்றும் 30 ஆக இருந்தது.
உண்மையில், கடந்த ஜூலை மாதம் மாநில அரசு அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெற்ற பிறகு, மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதத்தில் 1,008 மின்சார கார்களின் பதிவான நிலையில், இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 345 வாகனங்கள் பதிவானது.
தற்போது, தெலுங்கானாவில் 1.3 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 12,765 கார்கள் உள்பட 1.7 லட்சம் மின்சார வாகனங்கள் உள்ளன. இதே நிலை தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 60,000 புதிய மின்சார வாகனங்களை இணையும் என்ற நிலையில், இது போக்குவரத்து நேரிசலை மேலும் ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலை வரி மற்றும் மின்சார வாகனங்களுக்கான பதிவிலிருந்து விலக்கு அளிக்கும் தெலுங்கானா அரசின் முடிவு சரியான திசையில் இருப்பதாகவும், இது மின்சார வாகனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும் என்றும் டீலர்களும் உணர்ந்துள்ளனர்.
