Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கடந்த 9 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இந்தியா கவனம் பெற்றுள்ளது! உ.பி முதல்வர் யோகி பெருமிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள்
0
கடந்த 9 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இந்தியா கவனம் பெற்றுள்ளது! உ.பி முதல்வர் யோகி பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Halley Karthik
Published: Monday, June 12, 2023, 13:23 [IST]
லக்னோ: கடந்த 9 ஆண்டுகளில் சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயர் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் வியப்புடன் பார்த்து வருகின்றன என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இரண்டு நாள் பயணமாக வாரணாசி வந்திருந்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால ஆட்சியின் பெருமைகளை எடுத்துரைக்கும் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “2014 ஆம் ஆண்டுக்கு முன்பு மத்திய அரசின் அப்போதைய ஆட்சியின் மீது மக்கள் அவநம்பிக்கையுடனும், கோபத்துடனும் இருந்தார்கள். ஆனால், தற்போது மக்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பிம்பம் மாறுதல் அடைந்துள்ளது. எல்லைகள் பலமடைந்திருக்கின்றன. இந்தியா எப்படி வளர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் கூட பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. நமது நாட்டின் கவுரவம் மேம்பட்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் மேம்பாட்டிற்காகவும், மனிதக்குலத்தின் நலனுக்காகவும் பாஜக பாடுபடுகிறது. இதன் விளைவாகதான் தற்போது இந்தியா உலக நாடுகளின் வரிசையில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து இருக்கிறது. ஒரு காலத்தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் தற்போது அமைதிப் பாதையில் சென்றுள்ளது. பிரிவினைவாதிகளின் கைகளில் இருந்த வடகிழக்கு மாநிலங்கள் தற்போது வளர்ச்சியின் பாதையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் 120 மாவட்டங்களில் நக்சல்கள் தீவிரமாக இயங்கி வந்தனர். தற்போது இவர்கள் 3-4 மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடியின் தலைமைதான் காரணம்” என்று கூறியுள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
In the last 9 years, India’s name has gained an inescapable place among international countries. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that the world is watching India’s development with amazement.
Story first published: Monday, June 12, 2023, 13:23 [IST]

.

Previous Post

செந்தில்பாலாஜி கைது | ‘ஒன்றிய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Next Post

ராஜபாளையம் | சமூக வலைதளம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராஜபாளையம் | சமூக வலைதளம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது

ராஜபாளையம் | சமூக வலைதளம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In