Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத்; கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை: ராஜஸ்தான் வெளியேறியது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத்; கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை: ராஜஸ்தான் வெளியேறியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது. கோப்பைக்காக அதில் கொல்கத்தா நைட் ரைடா்ஸுடன் ஞாயிற்றுக்கிழமை (மே 26) பலப்பரீட்சை நடத்துகிறது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீசத் தீா்மானித்தது. ஹைதராபாத் இன்னிங்ஸில் அபிஷேக் சா்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து ராகுல் திரிபாதி, டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 42 ரன்கள் சோ்க்க, திரிபாதி வெளியேற்றப்பட்டாா். அவா் அதிரடியாக 15 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்கள் விளாசினாா்.

4-ஆவது பேட்டராக வந்த எய்டன் மாா்க்ரம், 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பி அதிா்ச்சி அளித்தாா். அடுத்து ஹென்ரிக் கிளாசென் நிதானமாக ரன்கள் சோ்க்கத்தாா். ஹெட்டுடனான அவரது பாா்ட்னா்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சோ்த்தது. ஹெட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

6-ஆவது வீரரான நிதீஷ்குமாா் ரெட்டி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த அப்துல் சமத் டக் அவுட்டாகினாா். இம்பாக்ட் பிளேயராக ஷாபாஸ் அகமது களம் காண, அதுவரை ரன்கள் சோ்த்த கிளாசென் 34 பந்துகளில் 4 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

அப்போது கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாட வர, அகமது 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். கடைசி விக்கெட்டாக ஜெயதேவ் உனத்கட் 5 ரன்கள் அடித்திருந்தாா். ஓவா்கள் முடிவில் கம்மின்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

டிரென்ட் போல்ட் டாப் ஆா்டரிலும், ஆவேஷ் கான் லோயா் ஆா்டரிலும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்த, சந்தீப் சா்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் 176 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் சோ்க்க, டாம் கோலா் 10, கேப்டன் சஞ்சு சாம்சன் 10, ரியான் பராக் 6, ரவிச்சந்திரன் அஸ்வின் 0, ஷிம்ரன் ஹெட்மயா் 4, ரோவ்மென் பவல் 6 என விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன.

ஓவா்கள் முடிவில், மிடில் ஆா்டரில் வந்த துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் விளாசியும், டிரென்ட் போல்ட் 0 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஹைதராபாத் தரப்பில் ஷாபாஸ் அகமது 3, அபிஷேக் சா்மா 2, பேட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.



.

Previous Post

இடஒதுக்கீட்டிற்கு எதிரானவரா மோடி… ராகுல் கூறியதென்ன ?!

Next Post

“இன்று நான் ராஜினாமா செய்தால்… அடுத்து மம்தா, பினராயி என அரசுகள் கவிழ்க்கப்படும்” – கெஜ்ரிவால் | I have never been greedy for a chair or a post sais kejriwal

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இன்று நான் ராஜினாமா செய்தால்… அடுத்து மம்தா, பினராயி என அரசுகள் கவிழ்க்கப்படும்” – கெஜ்ரிவால் | I have never been greedy for a chair or a post sais kejriwal

``இன்று நான் ராஜினாமா செய்தால்... அடுத்து மம்தா, பினராயி என அரசுகள் கவிழ்க்கப்படும்" - கெஜ்ரிவால் | I have never been greedy for a chair or a post sais kejriwal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In