அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்கின்றன.
இவ்விரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி, அருணாச்சல் பிரதேசம் (மொத்த தொகுதிகள் 60) வாக்கு எண்ணிக்கை – முன்னணி மற்றும் வெற்றி நிலவரம்:
பாஜக –> 44 இடங்களில் வெற்றி, 2 இடங்கள் முன்னிலை
என்பிபி –> 5 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் –> 1
இதர கட்சிகள் –> 2 இடங்களில் வெற்றி, 1 முன்னிலை
சிக்கிம் (மொத்த தொகுதிகள் 32) வாக்கு எண்ணிக்கை – முன்னணி மற்றும் வெற்றி நிலவரம்:
எஸ்.கே.எம் –> 31 இடங்களில் வெற்றி
எஸ்.டி.எஃப் –> 1 இடத்தில் வெற்றி
பாஜக –> 0
காங்கிரஸ் –> 0
இதர கட்சிகள் –> 0
