ஜீயர்களுக்கு பாதப்பூஜை செய்து பரிகாரம் தேடும் தி.மு.க-வின் தலைவர் பெருமக்கள், இளையராஜாவுக்கு நேர்ந்த அவமரியாதைக்கு எதிராக அறச்சீற்றம் கொள்ளாது இருப்பார்கள் என்றால், அதைப் போல ஒரு இழிநிலை வேறுண்டா?
ஆண்டாள் கோயில் மரபுப்படி, வழக்கப்படி தான், இளையராஜா வெளியேற்றப்பட்டார் என்று தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையே கூறுவது பெருங்கொடுமையாகும். அந்த மரபையும், பழக்கத்தையும் உருவாக்கியர்கள் யார்? ஆகமவிதி என்று பா.ஜ.க கூறுவதற்கும், மரபு – பழக்கம் என்று தி.மு.க கூறுவதற்கும் என்ன வேறுபாடு உள்ளது? ஆகம விதி, மரபு, பழக்கம் என்பதெல்லாம் தமிழர்களை வெளியேற்ற நடக்கும் சதியேயாகும்.
