Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“உதயநிதி, உங்க அப்பா கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கே வேலை இல்லை” – தமிழிசை காட்டம் | Exclusive

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2024
in அரசியல் செய்திகள்
0
“உதயநிதி, உங்க அப்பா கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கே வேலை இல்லை” –  தமிழிசை காட்டம் | Exclusive
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


” ‘பிளவுவாத அரசியல் செய்பவர்கள் கொள்கை எதிரி’ என்கிறாரே த.வெ.க தலைவர் விஜய்?”

“முதலில் மத்திய அரசு குறித்தும், நீட், இருமொழி கொள்கைகள் போன்ற மத்திய அரசின் தேசிய கொள்கைகள் குறித்தும் தனது எண்ணத்தை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும். நமது அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்றவை நிலைகுலைந்து இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் 25 கோடி மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து மேலே கொண்டுவந்து இருக்கிறோம். ஆனால் விஜய் வறுமையில் இருந்து மக்களை மீட்பேன் என்கிறார். ஏற்கெனவே அதைத்தான் சிறப்பாக பிரதமர் மோடி செய்து கொண்டு இருக்கிறார். சிறுபான்மையின மக்களை பிரித்தாளுகிறார்கள் என்பதுதான் விஜய் போன்றவர்கள் பாசிசம் என்கிறார்கள்.  ஆனால் பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையின மக்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். எனவே விஜய் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்.”

விஜய்

“த.வெ.க தீர்மானத்தில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?”

“மத்திய அரசு குறித்து புரிதல் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஒன்றிய அரசு என குறிப்பிட்டு இருக்கிறார். தி.மு.க-வை எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டு அவர்களின் சாயலில்தான் பேசுகிறார். இதையடுத்து தி.மு.க-வினர் சந்தோசமாக எங்களது கருத்தைத்தான் விஜய் சொல்கிறார் என்கிறார்கள். எனவே திமுகவை எதிர்ப்பதில் விஜய் தீவிரமாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு என திமுக சொல்வதை வைத்து பேசுகிறாரா?. விஜய்க்கு தனித்தன்மை இருக்கு என நினைத்தேன். அது சுத்தமாக இல்லை. 20 ஆண்டுகள் தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதும் கல்வியை ஏன் மாநில பட்டியலுக்கு கொண்டுபோகவில்லை. அதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும். நீட் குறித்த தவறான பார்வை விஜய்யிடம் இருக்கிறது. இந்தியை மத்திய அரசு எங்கும் திணிக்கவில்லை. இடையூறும் செய்யவில்லை. அவரது தீர்மானங்கள் அனைத்தும் திமுகவின் சாயலில்தான் இருக்கிறது. பிறகு எப்படி தி.மு.க எதிர்ப்பை முன்னெடுத்து செல்வார். முதலில் குழப்பம் இல்லாத நிலைக்கு விஜய் வர வேண்டும்.”

முதல்வர் ஸ்டாலின்

” ஆனால், த.வெ.க, “பா.ஜ.க-வின் சி டீம்” என தி.மு.க அமைச்சர் ரகுபதி சொல்கிறாரே?”

“தி.மு.க-வை சிறிதாக விமர்சனம் செய்தால் கூட எதிர்வினையாற்றுவார்கள். ஆனால் விஜய் விஷயத்தில் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை திசை திரும்புவதில் விற்பனர்கள். பா.ஜ.க என குறிப்பிட்டு விஜய் பேசவில்லை. ஆனால் சிலர்தான் அப்படி சொல்கிறார்கள். இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மத கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் ஏற்பட்டன. தி.மு.க-வின் வாரிசு நல்லதல்ல, ஊழல் அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் விஜய் பேசினார். அதற்கு உங்களின் பதில் என்ன?. ஆகவே இதெல்லாம் அவர்களின் யுக்தி”

ரகுபதி

“அப்போது விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா?”

“மத்தியில் கூட்டணி வைத்துக்கொண்டு அமராவதியை உலகத்தரத்துக்கு மாற்றியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. ஏறக்குறைய 20 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது, தி.மு.க. ஆந்திராவை போல தமிழகத்தில் ஏதேனும் புரட்சி ஏற்பட்டிருக்கிறதா?. பெங்களூருவில் இருக்கும் ஐடி சிட்டி, அதானியை பகைத்துக்கொண்டே விழிஞ்சியம் துறைமுகத்தை கேரளாவில் பெரிதாக காட்டுகிறார்கள். வேதாந்தா நிறுவனம் 2 லட்சம் கோடியில் ஒடிசாவில் நிறுவனம் அமைக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த பால் நிறுவனம் 300 கோடியில் ஐதராபாத்தில் தொழிற்சாலை அமைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்றதால் இத்தனை லட்சம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என சொல்ல முடியுமா?. அழகிரி, ஆ.ராசாவை அமைச்சராக்கினீர்கள். கனிமொழியை வெளியில் கொண்டுவர முயற்சித்தீர்கள். தயாநிதி மாறனுக்கு அங்கீகாரம் கொடுத்தீர்கள். இதில்தான் திமுகவின் கவனம் இருந்தது. 1967-ல் இருந்து ஏமாற்றி வருகிறார்கள். எனவே இதற்கு ஒரு மாற்று வேண்டாமா?. ஆகவே அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.”

“சட்ட நகலையே கொளுத்துவோம்” – அழைப்பு விடுக்கும் திருமா!

“திருமா, விஜய் ஒரே மேடையில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் தமிழக அரசியலில் புதிய மாற்றம் உருவாக போகிறது என்கிறார்களே?”

“இது ஒரு ஆரோக்கியமான விஷயமாக பார்க்கிறேன். பா.ஜ.க, அ.தி.மு.க, விஜய், கிருஷ்ணசாமி என எல்லோருக்கும் தி.மு.க-தான் எதிரியாக இருக்கிறது. எனவே அனைவரும் தனித்தனியாக இருந்து தி.மு.க-வை ஜெயிக்க வைக்க போகிறார்களா? அல்லது ஒன்றாக இணைந்து தோற்கடிக்க போகிறீர்களா?. திருமாவளவன் கேட்ட இடங்களை கொடுக்கவில்லை, தனி தொகுதியில்தான் நிற்க வேண்டும் என சமூகநீதியற்ற பார்வையை தி.மு.க கொண்டிருக்கிறது. ஏன் தி.மு.க-வுக்கு துணைபோய் கொண்டிருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. துணை முதல்வர் பதவி கொடுக்க மாட்டார்கள். விசிக கூட்டம், கொடிக்கம்பத்துக்கு அனுமதி மறுக்கிறார்கள். ஆக அமைதியாக திருமாவளவன் வளர்வதை ஸ்டாலின் விரும்பவில்லை. உதயநிதிக்கு போட்டியாக யார் வருவதையும் அவர் விரும்பவில்லை.”

உதயநிதி ஸ்டாலின்

“கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பாசிசத்துக்கு எதிராக அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைய வேண்டும் என்கிறாரே உதயநிதி?”

“முதலில் பாசிசம் என்றால் என்னவென அவருக்கு தெரியுமா?. அப்படி ஒன்றிணைக்கவே முடியாது. இந்து தர்மத்தின் மீது மக்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஐயப்பன் கோவிலுக்கு செல்வோருக்கு காப்பீடு அறிவித்திருக்கிறது கேரளா அரசு. நரசிம்ம வாராகி என பவன் கல்யாண் ஆரம்பித்து இருக்கிறார். சனாதானத்துக்கு எதிராக இவர்கள் பேசினால் பதிலடி கொடுப்பதற்காக அந்த இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். ஆகவே நீங்கள் இனி ஏமாற்ற முடியாது?. நாங்கள் மற்ற மாதத்திற்க்கு எதிரானவர்கள் இல்லை. அதேநேரத்தில் எங்கள் மதத்தின் மீது உறுதியாக இருப்போம்.”

அஜித்

“அஜித் குறித்த உங்களது கருத்துக்கு தமிழிசை போல எனக்கு வேலைவெட்டியில்லை என நினைக்கிறாரா?”என உதயநிதி உங்களை சாடியிருக்கிறாரே?”

“யாரையும் குறைந்து மதிப்பிடாதீர்கள். இதே ஆணவத்தோடுதான் கே.சி.ஆர் இருந்தார். அதனால்தான் இன்று வீட்டில் இருக்கிறார்.  இது சூரஸம்ஹரம் நடைபெறும் வாரம். முருகன் வேலை வைத்துதான் எதிரியை வெட்டி சாய்த்தார். அதேபோல `வேலை வைத்து வெட்டி சாய்க்கக்கூடிய வேலை வெட்டி இல்லாதவர்’ என உதயநிதி எடுத்துக்கொள்ளட்டும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டு விட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன்.

13 ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது உங்களது தாத்தா வேலை வெட்டி இல்லாமல் இருந்தாரா?. அரசியல் கட்சி தலைவர்களை பதவி இருந்தால்தான் மதிப்பீர்களா?. நான் தியாகம் செய்து மேலே வந்திருக்கிறேன். வேலை வெட்டி இல்லாத தமிழிசை உங்களை வெட்டி சாய்க்க எவ்வளவு நகர்வுகளை எடுக்க போகிறேன் என்பதை பொறுத்திருந்துதான் பாருங்கள்.

என்னுடைய அரசியல் அனுபவத்திற்கும் உதயநிதி அனுபவத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. கடுமையான உழைப்பு, சுய முயற்சியால் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். உங்களது அப்பா கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கே வேலை இல்லை. எனக்கு எப்போதும் வேலை இருக்கும் என்பதை உதயநிதி புரிந்துகொள்ள வேண்டும்.”

சீமான், விஜய்

“தம்பியுடன் கைகோர்ப்போம் என பேசிவந்த சீமான் தற்போது விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறாரே?”

“சீமானின் பேச்சாற்றலுக்கு நான் ரசிகை. அவரது பேச்சில் பயமும், பதற்றமும் இருப்பது தெரிகிறது. அதேநேரத்தில் விமர்சனம் செய்யும் போது வார்த்தை ஜாலங்கள் இருக்கலாம். அசிங்கங்கள் இருக்க கூடாது. நடுவில் நின்றால் செத்து போவாய், கூமுட்டை என்றெல்லாம் பேசுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. இன்னொரு கட்சியை விமர்சனம் செய்யலாம். ஆனால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்ல முடியாது. இருவரும் திரைத்துறையில் இருந்துதான் வந்திருக்கிறார்கள். நான் இயக்கும்படிதான் விஜய் நடிக்க வேண்டும் என்றால் திரைப்படத்தில் நடிக்கலாம். தரைத்தளத்தில் எப்படி முடியும்?. சீமானின் பேச்சு மிகவும் உக்கிரமாக இருக்கிறது.  இதற்கு விஜய் கட்சி நிர்வாகி, ‘சீமான் நெஞ்சில் இருந்து இந்த வார்த்தைகள் வரவில்லை. பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள்’ என சொல்லியிருந்தார். அந்த சந்தேகம் பலருக்கு வந்திருக்கிறது.”

செல்வப்பெருந்தகை

“மனோமணியம் சுந்தரனார் பல்கலை சென்ட் உறுப்பினராக ஏபிவிபி தென் மண்டல தலைவர் சவிதா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் வகுப்புவாத கருத்துக்களை பரப்ப ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாரே?”

“பல பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. காங்கிரசில் செயலாளர்களாக இருந்தவர்களை துணைவேந்தர்களாக கொண்டுவந்தது மட்டும் இல்லமால் நீதித்துறைக்கு கொண்டு வந்தார்கள். ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கருத்துக்களைதான் பதிய வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. திராவிடர் கழகத்தை சேர்த்தவர்கள் பல பதவிகளில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் அந்த கருத்துக்களைதான் பதிவு செய்வார்கள் என்று அர்த்தமா?. எனவே செல்வப்பெருந்தகை இத்தகைய கருத்துக்களை பதிவு செய்ய கூடாது.”

டிடி முதல் பி.எஸ்.என்.எல் வரை – காவி மயமும் ‘பாரத’ பற்றும்

“வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ், பி.எஸ்.என்.எல் என அனைத்தும் காவி நிறத்தில் மாற்றப்படுவது விமர்சனத்தை கிளப்பியிருக்கிறதே?”

“தமிழ் நாள், வாரம், மாதம், ஆண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசை யார் வேண்டாம் என சொன்னது. பல ஆண்டுகளாக சுதந்திரத்தை கொண்டாடும் ஒரு பகுதியாக இந்தி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தி மொழியை பிரபலப்படுத்த ப.சிதம்பரம் இந்தி மொழியில் பேசியிருக்கிறார். அரசு நிகழ்ச்சிக்கு உதயநிதி என்ன நிறத்தில் டி-சர்ட் போடுகிறார்?.  முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் கருப்பு, சிவப்பு இருக்கிறது. உலக செஸ் போட்டியிலும் இதைத்தான் செய்தீர்கள். காவி என்பது பா.ஜ.க-வின் கலர் இல்லை. தேசியக்கொடியில் இருக்கும் வண்ணம். எதை செய்தாலும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது.”

வயநாடு தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

“வயநாடு தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸுக்கு வெற்றிவாய்ப்பு குறைவுதான் என்கிறார்களே?”

“வயநாட்டில் 45% இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் பார்க்காமல் ஒட்டு போட்டு விடுவார்கள் என்பதால்தான் வயநாட்டுக்கு வந்திருக்கிறார், பிரியங்கா காந்தி. எனவே இவர்கள் மதச்சார்பு அற்றவர்கள் அல்ல. வாக்காளர்கள் யார் என்பதை பார்த்து வாக்கு கேட்க வந்திருக்கிறீர்கள். ஐதராபாத்தில் இதுதான் நடந்தது. ஆனாலும் நம்மை ஏமாற்றுவதற்குத்தான் இங்கு வந்திருக்கிறார்கள் என்பதை இஸ்லாமிய மக்கள் உணர்ந்து கொண்டு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். வயநாடு மக்கள் பிரச்னையில் இருக்கும் போது அந்த மக்களை ராகுல் ஏமாற்றினார். பிரியங்கா போட்டியிடுவதன் மூலம் தென் மாநிலங்களில் அப்பட்டமான வாரிசு அரசியல் விதைக்கப்படுகிறது.”

கோவை திமுக ஆலோசனை கூட்டம்

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் சூழலில் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக, ஆந்திர முதல்வர்கள் சொல்கிறார்களே?”

“ஸ்டாலின் பேசியது தவறு. உரிமைகளை பெறுவதற்கு போராடலாம். குடும்ப கட்டுப்பாடு என்பது பொருளாதாரம் மட்டும் இல்லை. சுகாதாரமும் இருக்கிறது. பெண்களின் சுகாதாரமும் இருக்கிறது. உங்களுக்காக பெண்களின் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற சொல்வேன் என்றால் பெண்களை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?. ஒரே நாடு ஒரே தேர்தல் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. யூகத்தின் அடிப்படையில் எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகள் குறையாமல் இருக்க ஆரோக்கியமான விவாதம் தேவை”

அண்ணாமலை

“ஒரு திராவிட கட்சி ஓட்டு சதவீதம் 12க்கு கீழே குறைய வாய்ப்புள்ளது என மீண்டும் அ.தி.மு.க-வை அண்ணாமலை சீண்டிருக்கிறாரே?”

“யூகத்தின் அடிப்படையில் அ.தி.மு.க குறித்து பேசினார் என்கிறார்கள். அவரது கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் இன்றைய சூழலில் ஒரு கட்சி அழிகிறது என்று நினைப்பதைவிட எந்த கட்சியை அழிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய சூழலில் பொது எதிரியாக தி.மு.க நினைக்க வேண்டும்.”

அமித்ஷா.

“கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன், “கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட அமித் ஷா திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறார்”

“இதற்கு அந்நாட்டு தூதரை அழைத்து கடும் கண்டம் தெரிவித்திருக்கிறோம். தொடர்ச்சியாக அவர்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகிறார்கள்.  இதுபோன்ற கருத்துக்களை சொல்வதன் மூலம் கனடா மிகவும் பின்தங்கிய நாடக ஆகிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் வந்துகொண்டிருக்கிறது. இந்த கருத்தில் உள்நோக்கம் இருக்கிறது.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Donald Trump: அமெரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் ராஜ்ஜியம்; இந்தியாவுக்குச் சாதகமா, பாதகமா?



.

Previous Post

பலுசிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி, 30 பேர் காயம்

Next Post

மகாராஷ்டிரத்தில் ரூ. 3.7 கோடி பணம் பறிமுதல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிரத்தில் ரூ. 3.7 கோடி பணம் பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் ரூ. 3.7 கோடி பணம் பறிமுதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In