அமெரிக்காவின் புகழ்பெற்ற “கண்ணுக்குத் தெரியாத வீட்டில்’ (Invisible House) தங்கியிருந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவருக்கு செல்ஃபி எடுத்ததற்காக சுமார் 8.7 லட்சம் ரூபாய் ($10,000) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் ஜோஷுவா ட்ரீ தேசியப் பூங்காவில் அமைந்துள்ள இந்த ‘கண்ணுக்குத் தெரியாத வீடு’ அதன் தனித்துவத்திற்காக பெயர்பெற்றது.
பாலைவனச் சூழலுடன் ஒன்றிணைந்து, கண்ணுக்குப் புலப்படாதது போன்ற தோற்றத்தை அளிப்பதால் இது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஒரு இரவு தங்குவதற்கு இதன் வாடகை சுமார் $2,400 (சுமார் 2.1 லட்சம் ரூபாய்) ஆகும்.
இந்த நிலையில் டேவிஸ் என்ற இன்ஃப்ளூயன்சர் இந்த வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவரது நண்பரின் காதலி வீட்டின் குளியலறையில் ஒரு செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
