Last Updated:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என்ற கருத்து தெரிவித்தார்.
75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
புனேவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ”உங்களுக்கு 75 வயதானது என்றால், நீங்கள் மற்றவர்களுக்கு வழி விட வேண்டிய நேரம் என்று அர்த்தம்…” என தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் மாதம் 75 வயதாகும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது. பிரதமர் மோடி மட்டுமின்றி, மோகன் பகவத்திற்கும் வரும் செப்டம்பர் மாதம் 75 வயதாகப்போகிறது. இந்த நிலையில் தான் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் 75 வயதான பிறகு ஓய்வு பெற்ற நிலையில், அந்த விதி பிரதமர் மோடிக்கும் பொருந்துமா என சிவசேனா (உத்தவ் பிரிவு) கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால், நரேந்திர மோடி 2029ஆம் ஆண்டு வரை பிரதமராகவே நீடிப்பார், அவர் ஓய்வு பெறப்போவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2023ஆம் ஆண்டு விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
Pune,Maharashtra
July 11, 2025 11:32 AM IST
”உங்களுக்கு 75 வயதானால், நீங்கள் மற்றவர்களுக்கு வழி விட வேண்டிய நேரம்..” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

