சென்னையில் இட நெருக்கடி!
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மற்ற நகரங்களை ஒப்பீடு செய்யும் போது சென்னை விமான நிலையில் இட நெருக்கடி நிறைந்த விமான நிலையமாக உள்ளது. டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும், பெங்களூரு விமான நிலையம் 4 ஆயிரம் ஏக்கரிலும் அமைந்து உள்ளது. ஆனால் சென்னை விமான நிலையம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்தான் உள்ளது. எனவே இது மிகவும் இட நெருக்கடி நிறைந்த விமான நிலையம். தற்போது சென்னை விமான நிலையத்தை ஆண்டுக்கு 2.5 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் இது 10 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில்தான் சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை முழு தமிழ்நாடும் எதிர்பார்க்கிறது.
