Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ – நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2024
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ – நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சாடும்  நாராயணசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “புதுச்சேரியில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில வரலாற்றில் முதல் முறையாக ரமேஷ், பாலாஜி, ஜான்சன் என்ற மூன்று பி.சி.எஸ் (Provincial Civil Service) அதிகாரிகள் ஊழலில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படியான உயரதிகாரிகள் மட்டுமல்ல, சில அரசு ஊழியர்களும் ஊழல் புகாரில் சிக்கி வருகின்றனர்.

நாராயணசாமி

அந்த வகையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வரும் ரவிக்குமார் என்பவரது வீட்டில், சி.பி.ஐ அதிகாரிகள் 5 நாட்கள் சோதனை நடத்தியிருக்கின்றனர். அப்போது ரவிக்குமார் தன்னுடைய பெயரிலும், மனைவி பிரியதர்ஷினி மற்றும் மாமியார் குமுதம் பெயரிலும், ரூ.106 கோடி சொத்துகள் சேர்த்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கும் சி.பி.ஐ, அந்த பட்டியலையும் எஃப்.ஐ.ஆரில் இணைத்திருக்கிறது.

இந்த ரவிக்குமாரிடம் பல அமைச்சர்கள் தொடர்பில் இருக்கின்றனர். அதனால்தான் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்த ரவிக்குமாரின் வீட்டில் அதிகாரிகள் இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சென்ற அமைச்சர் நமச்சிவாயம், அந்த அதிகாரிகளிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதிலிருந்தே இருவருக்கும் எந்த அளவுக்கு தொடர்பிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது” என்றார் அதிரடியாக.

நாராயணசாமி நிரூபித்துவிட்டால்

அதன் தொடர்ச்சியாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், “முன்னாள் முதல்வர் நாராயணசாமி என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் என்னுடைய பகுதியில் பிரச்னை நடக்கிறது என்று என்னுடைய கவனத்திற்கு வந்ததால், அங்கு சென்று அதை சரி செய்தேனே தவிர, எந்த குற்றவாளிகளுக்கும் ஆதரவாக நான் ஒரு போதும் இருந்ததில்லை. அந்த ரவிக்குமார் என்பவர் குற்றம் செய்திருந்தால், சம்மந்தப்பட்ட துறை அதற்கான நடவடிக்கையை எடுக்கப் போகிறது. அவர் ரூ.106 கோடி சொத்து சேர்த்திருந்தால், குற்றம் செய்திருந்தால், அதற்கான முகாந்திரம் இருந்தால் வருமான வரித்துறையும், சி.பி.ஐ-யும் அதற்கான நடவடிக்கையை எடுக்கப் போகின்றன.

நாராயணசாமியை அவருடைய கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அதனால் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக, நானும் ரௌடிதான் என்று இப்படியான அறிக்கைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். வருமானத்துக்கு அதிகமாக 106% சதவிகிதம் சொத்துகள் சேர்த்திருப்பதாகத்தான் சி.பி.ஐ-யின் அறிக்கையில் இருக்கிறதே தவிர, ரூ.106 கோடி என்று இல்லை.

அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்

ஆனால் நாராயணசாமி அதை ரூ.106 கோடி என்று கூறுகிறார். புதுச்சேரி சிறிய மாநிலம். அனைவரையும் அனைவருக்கும் தெரியும். அப்படியான நிலையில் இவர் அவருடைய பினாமி, அவர் இவருடைய பினாமி என்று இணைத்துப் பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை. நாராயணசாமி அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரவிக்குமார் என்னுடைய பினாமி என்பதை நாராயணசாமி நிரூபித்துவிட்டால், நான் இந்த அரசியலை விட்டே விலகுகிறேன். அரசியல் ரீதியாக நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்த வளர்ச்சி நாராயணசாமியின் கண்களை உறுத்துகிறது. அரசியலில் இருப்பதற்காக நான் வெளிநாடு செல்லக் கூடாதா ? நான் எந்த நாட்டுக்கு சென்றாலும், அரசின் முன் அனுமதி பெற்று முறையாகத்தான் செல்கிறேன். சட்டத்தை மீறி நான் எதையும் செய்யவில்லை. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

புதுச்சேரி: `அமைச்சர் நமச்சிவாயம் கட்சி மாறுவதில் ஏழாம் இடத்தில் இருக்கிறார்’ – வைத்திலிங்கம் எம்.பி



.

Previous Post

சென்னை மாநகராட்சி வேளச்சேரி மற்றும் பெருங்குடியில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களை இணைக்கிறது – பொதுமக்கள் மகிழ் | Greater chennai corporation linking roads of MRTS in velachery and perungudi

Next Post

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு; ரூ.9 லட்சம் கோடி இழப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பங்குச் சந்தைகளில் கடும் சரிவு; ரூ.9 லட்சம் கோடி இழப்பு

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு; ரூ.9 லட்சம் கோடி இழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In