
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
புவனேஸ்வர்: 2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
வரவிருக்கும் தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்றால், பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரத்தை விரும்பக்கூடும். பாஜக மற்றும் அதன் சித்தாந்தவாதியான ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும். அதே வேளையில் இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு இது கடைசி வாய்ப்பாக இருக்கும். நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கும் என்றார். பிகார் முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸை விட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புவது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.


வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் யாரு வெற்றி பெறப் போகிறார் என்பது தெரியவில்லை ஆனால் பிஜேபி மோடி ஜெயிக்கப் போவது இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரியும் அதற்கு முக்கிய காரணம் டாலரின் மதிப்பு கடுமையாக உயர்ந்து இருப்பதும் உலக வங்கியில் இந்தியாவின் கடன் தொகை அதிகரித்து இருப்பதுமே காரணம். இந்த இரண்டும் மட்டுமே ஒரு ஆட்சியின் தரத்தை நிர்ணயம் செய்கின்றன . எனவே இந்த பிஜேபி ஆட்சி தரமற்றதாக உள்ளது. இந்நிலை நீடித்தால் விரைவில் விலைவாசி ஏற்றமும் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்