நான் பயிற்சியாளராக இருந்திருந்தால்…
அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நீங்கள் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பீர்கள் என ரோஹித் சர்மாவிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளில் டாஸ் சுண்டப்படும்போது, ரோஹித் சர்மாவை நான் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். டாஸ் சுண்டப்படும்போது, பேசுவதற்கு அதிக நேரம் இருக்காது. இருப்பினும், ஒருபோட்டியின்போது ரோஹித் சர்மாவிடம் நான் பேசினேன். மும்பையில் நடைபெற்ற போட்டி என நினைக்கிறேன். நான் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால், நீங்கள் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என அவரிடம் கூறினேன்.
