Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‛‛சும்மா விடமாட்டேன்’’.. அவங்க எல்லாம் ஊழல்வாதிகள்! எதிர்க்கட்சியினரின் ஆலோசனையால் கொதித்த மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 27, 2023
in அரசியல் செய்திகள்
2
‛‛சும்மா விடமாட்டேன்’’.. அவங்க எல்லாம் ஊழல்வாதிகள்! எதிர்க்கட்சியினரின் ஆலோசனையால் கொதித்த மோடி
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Nantha Kumar R
Updated: Tuesday, June 27, 2023, 15:58 [IST]
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடியபோது பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியது பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். அவர்களை சும்மா விடமாட்டேன் என பிரதமர் மோடி ஆக்ரோஷமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்துக்கு இன்று சென்றார். அங்கு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு போபாலில் இன்று பாஜக கட்சி நிர்வாகிகளுடன், பூத் பணியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்த வேளையில் கட்சி நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆலோசனை நடத்தியது பற்றி பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். இதுபற்றி பிரதமர் மோடி கூறியதாவது: அனைத்து ஊழல்வாதிகளும் பாட்னா ஆலோசனை கூட்டத்தில் இணைந்துள்ளனர். ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அதோடு ஊழல் செய்த தலைவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். இந்த வேளையில் நான் உங்களிடம் ஒன்றை உறுதியாக சொல்கிறேன். ஊழல் செய்த யாரையும் நான் சும்மா விடமாட்டேன். அவர்கள் சிறை செல்ல நேரிடும். ஊழல் செய்த எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பதால் எதிர்க்கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் அவர்கள் கூட்டங்கள் நடத்தி ஒன்றாக இணைக்கின்றனர். காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கில் ஊழலை மட்டுமே செய்தள்ளது. ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் மோசடியில் நீண்ட பட்டியலை கொண்டுள்ளன” என சாடியிருந்தார். பொது சிவில் சட்டம் ஏன்? மேடையிலே விளக்கமளித்த பிரதமர் மோடி! எதிர்க்கட்சிகள் மீது கடும் ‛அட்டாக்’ இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சி தலைவர்கள் சில நாட்களுக்கு முன்பு பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட 16 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அவர்கள் சூளுரைத்தனர். மேலும் பாஜகவை எதிர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் அடுத்த மாதம் துவக்கத்தில் இமாச்சல பிரதேசத்தில் இன்னொரு முறை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Prime Minister Modi, while interacting with BJP leaders in Madhya Pradesh today, criticized the meeting held by opposition leaders in Patna. The corrupt are all united. Prime Minister Modi aggressively said that he will not leave them alone and created a stir.

.

Previous Post

ஆவடி | கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 5 ஆண்டு தலைமறைவாக இருந்த இளைஞர் டெல்லியில் கைது

Next Post

சண்டையில் ஒருவரின் அந்தரங்க உறுப்பை அழுத்துவது கொலை முயற்சி என கருத முடியாது -கர்நாடக உயர்நீதிமன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சண்டையில் ஒருவரின் அந்தரங்க உறுப்பை அழுத்துவது கொலை முயற்சி என கருத முடியாது -கர்நாடக உயர்நீதிமன்றம்|Karnataka high court says Squeezing testicles is not attempt to murder!

சண்டையில் ஒருவரின் அந்தரங்க உறுப்பை அழுத்துவது கொலை முயற்சி என கருத முடியாது -கர்நாடக உயர்நீதிமன்றம்

Comments 2

  1. Jegan says:
    3 years ago

    9 வருடம் புடிங்கி கிட்டா இருந்த

    Reply
  2. Jegan says:
    3 years ago

    Unnoda கர்நாடகா கட்சிகாரன் எல்லோரையும் உள்ள தூக்கி போடுபா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In