Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நானும் ஒருவனாய் இருப்பேன்!- அமீர் கருத்தும் தவெக – நாதக கூட்டணி வாய்ப்பும்.?!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2024
in அரசியல் செய்திகள்
1
நானும் ஒருவனாய் இருப்பேன்!- அமீர் கருத்தும் தவெக – நாதக கூட்டணி வாய்ப்பும்.?!
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளின்போது, “காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டு விஜய்யை உச்சி முகர்ந்தார்.

தமிழக வெற்றிக் கழகம்தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்

விஜய்யின் பதில் என்னவாக இருக்கும்?

ஒரு பக்கம் சீமான் எல்லா வகையிலும் விஜய்யுடனான கூட்டணிக்கான சிக்னல் கொடுத்துவரும் நிலையில் விஜய்யின் பதிலுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலின்போது சீமானின் நா.த.க மைக் சின்னத்தில் போட்டியிட, தேர்தலில் போட்டியிடாத விஜய்யின் ஆதரவு யாருக்காக இருக்கும் என்ற பேச்சு எழுந்தது. அப்போது வெளியான விஜய்யின் அடுத்த படமான `கோட்’ படத்தின் `விசில் போடு’ பாடல் போஸ்டரில் `மைக்’ இடம்பெற்றிருந்ததையும், `கேம்ப்பைனை திறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?’ என்று பாடல் வரிகள் இடம்பெற்றிருந்ததைவும் குறிப்பிட்டு சீமானின் நாம் தமிழர் கட்சியினர் `விஜய்யின் ஆதரவு எங்களுக்குத்தான்!’ என கொக்கரித்தனர்.

`கோட்' படத்தின் `விசிப் போடு' பாடல் போஸ்டரில் `மைக்`கோட்' படத்தின் `விசிப் போடு' பாடல் போஸ்டரில் `மைக்
`கோட்’ படத்தின் `விசிப் போடு’ பாடல் போஸ்டரில் `மைக்

தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிவில், முதல்முறையாக 8% வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக, “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” என விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட அதற்கு சீமான், “உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!” என கணிவுடன் நன்றி தெரிவித்தார்.

அதேபோல, கடந்த மாதம் விஜய் தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, பெரும்பாலான அரசியல் தலைவர்களின் பெயர்களுக்கு முன்பாக சாதாரணமாகவும் `மதிப்பிற்கு உரிய, அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய’ என்று முன்னொட்டைச் சேர்த்த விஜய், சீமானின் பெயருக்கு முன்பாக மட்டும் `நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான்’ என்று தனித்துக்காட்டி நன்றி தெரிவித்திருந்தார்.

விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து
விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

அந்த நிலையில், `சீமானுடன் கூட்டணி வைப்பீர்களா?’ என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம் பத்திரிகையாளர்கள் கேட்க, “எதுவாக இருந்தாலும் எங்கள் தலைவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியே அறிவிப்பார்!” என்று பதிலளித்தார். இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “விரைவில் நடைபெறவிருக்கும் த.வெ.க மாநாட்டில் விஜய் ஒருவேளை சீமானுக்கு அழைப்பு விடுக்கும்பட்சத்திலோ, அல்லது தனது லெட்டர் பேடில் `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனத் தெரிவித்திருப்பதை அடியொற்றி தமிழ், தமிழர் நலன், தமிழ்த்தேசிய அரசியலை மையப்படுத்தி கொள்கை கோட்பாடுகளை அறிவித்தாலோதான் கூட்டணியை உறுதியாக எதிர்பார்க்க முடியும். அதுவும் 2026 தேர்தல் சமயத்தில்தான் விஜய் தனித்துப் போட்டியாக, மெகா கூட்டணியா, அப்படி கூட்டணி என்றால் யார் தலைமையில் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட், தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படுமா? எனப் பல கட்டங்கள், பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. அதற்கான விடை விஜய்யின் முதல் மாநாட்டில் அவரின் முதல் அரசியல் உரையின்போதுதான் தெரியவரும்!” என்கின்றனர்.

.

Previous Post

ITR தாக்கல் செய்த பிறகு ரீஃபண்ட் கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்..?

Next Post

RB Udayakumar: கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது – மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!-rb udayakumar arrested in protest near tirumangalam demanding the removal of the kappalur toll plaza

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
RB Udayakumar: கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது – மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!-rb udayakumar arrested in protest near tirumangalam demanding the removal of the kappalur toll plaza

RB Udayakumar: கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது - மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!-rb udayakumar arrested in protest near tirumangalam demanding the removal of the kappalur toll plaza

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In