மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன் மூலம் பாஜக முதல் முதலாக கேரளாவில் கால் பதித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (09.06.2024) மாலை நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்று, மத்திய இணையமைச்சராக சுரேஷ் கோபி பதவியேற்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிக்கவிருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறினேன், ஆனால் கட்சி தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தன்னை விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
.
